16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி!
பொள்ளாச்சியில் 16 வயது பெண்ணை நாசம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்றாலே இப்போதெல்லாம் நடுங்குகிறது.. 16 வயது சிறுமியை 6 பேர் கூட்டாக சேர்ந்து நாசம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து அந்த 6 பேரையும் வளைத்து பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்ததற்கு இன்னும் ஒரு தீர்வு தெரியவில்லை. இளம்பெண்களை மிரட்டி சீரழித்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை.
போன மாதம்கூட ஸ்கூலுக்கு செல்லும் மாணவிகளிடம் 4 பேர் கொண்ட கும்பல் லவ் டார்ச்சர் செய்துள்ளது. அதற்கு மாணவிகள் மறுக்கவும், அவர்களை வழிமறித்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வந்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் சொல்லி, அது சம்பந்தமான நடவடிக்கையும் போய் கொண்டிருக்கிறது.

பராமரிப்பு
இப்போது அடுத்த விவகாரம் தலைதூக்கி உள்ளது. 16 வயசு பெண்.. இந்த சிறுமியின் தந்தை வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் இந்த பெண் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொஞ்ச நாளாக ஸ்கூலுக்கு போகாமல் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

நண்பர்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம், தன் வீட்டுக்கு வரும்படி பெண்ணை அழைத்துள்ளான் காதலன். அதன்படியே சென்ற பெண், காதலனுடன் நீண்ட நேரம் வீட்டில் தனியாக உட்கார்ந்து பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், காதலனின் நண்பர்கள் 5 பேர் வீட்டுக்குள் திடுதிப்பென்று நுழைந்துள்ளனர்.

கூட்டு பலாத்காரம்
இறுதியில் காதலனுடன் சேர்ந்து 6 பேரும் கும்பலாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பெண், சொந்தக்காரர்களிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் இது பற்றி புகார் அளிக்கப்பட்டது.

கைது
அந்த புகாரின்பேரில் போலீசாரும் துரிதமாக இந்த விசாரணையில் இறங்கி நேற்று இரவே அந்த 6 பேரையும் ரவுண்டு கட்டி பிடித்துவிட்டனர். அவர்களை கைது செய்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications