கோவையே குளிரப்போகுது.. இத்தனை கோடியில் “பியூச்சர் பிளான்”! திருப்பூரும் திரும்புதே - சி.எஸ். ரெய்டு
கோவை: மேட்டுப்பாளையம் அருகே தலைமை நீரேற்றும் நிலைய கட்டுமான பணிகளையும், பவானி ஆற்றில் அமைக்கப்பட்டுவரும் திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டுகுடிநர் திட்டப் பணிகளையும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் -Ill. ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமான பணிகளையும், பவானி ஆற்றில் அமைக்கப்பட்டுவரும் திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டுகுடிநீர்; திட்ட நீரேற்று நிலை தடுப்பணை கட்டுமான பணி, கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட குழாய் மற்றும் நீர்பின்னேற்றம் தடுப்பு கட்டுப்பாட்டு குழாய் அமைக்கும் பணிகளையும் இன்று (22.10.2023) தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப.. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, மண்டல இயக்குநர்(நகராட்சி நிர்வாகம்) திரு.மா.இளங்கோவன், மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்றத் தலைவர் திருமதி.மெஹரிபாபர்வின் அசரப் அலி, துணைத் தலைவர் திருமதி. அருள்வடிவு முனுசாமி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் திருமதி.இரா.அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லூர்- III திட்டம் 2035ம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.779 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் திட்டம் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்றுவருகிறது.
மேட்டுப்பாளையம் வட்டம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலையம் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் ஆய்வுமேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுக்கு; அறிவுறுத்தினார். மேலும், திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டுகுடிநீர்; திட்ட நீரேற்று நிலைய தடுப்பணை கட்டுமான பணி, கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட குழாய் மற்றும் நீர்பின்னேற்றம் தடுப்பு கட்டுப்பாட்டு குழாய் அமைக்கும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, மேட்டுப்பாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் நகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் எவ்வளவு கி.மீ தூரத்திற்கு நடைபெறுகிறது. எத்தனை குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பணிகள் எந்த அளவு முடிவுற்றுள்ளன, மீதமுள்ள பணிகள் என்ன என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்றுவரும் பணிகள், மேற்கொள்ளப்படவுள்ள திட்டப்பணிகள் குறித்த திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications