Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஎச்.டி பட்டம் போலி.. MyV3 Ads விஜயராகவன் சிக்கியது எப்படி? நெஞ்சுவலி நாடகம்! கோவையில் பரபர விசாரணை

Subscribe to Oneindia Tamil

கோவை: மோசடி புகாரில் மதுரையில் கைது செய்யப்பட்ட V3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவனை கோவைக்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விஜயராகவன் சிக்கியது எப்படி என்பது பற்றிய பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த விஜயராகவனை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று இரவு கைது செய்தனர்.

Shocking information revealed that how My V3 ads founder Vijayaraghavan caught

விஜயராகவன் கைது: மதுரை சென்று கோவை போலீசார் விஜயராகவனை விசாரணைக்கு அழைத்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால் விஜயராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுரை தனியார் மருத்துவமனையில் விஜயராகவன் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து நள்ளிரவில் 200க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விஜயராகவனை கைது செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மை வி3 ஆட்ஸ் மோசடி: கோவையில் இருந்து இயங்கி வந்த MYV3 Ads ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பொதுமக்களிடம் 360 ரூபாய் முதல் ரூ.1.20 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்று, மொபைல் ஆப்பில் விளம்பரம் பார்த்தால், நாள்தோறும் பணம் தருவதாகவும், முதலீட்டுக்கு ஏற்ப பல மடங்கு சம்பாதிக்கலாம் என்றும் கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் தினசரி 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும், செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.

சக்தி ஆனந்த் கைது: லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை மோசடி செய்து ஏமாற்றி வருவதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வந்த MyV3 Ads நிறுவன எம்.டி சக்தி ஆனந்த், தங்கள் நிறுவனத்தின் மீது சிலர் வீண் பழி போட முயல்வதாக குற்றம்சாட்டி, ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால், சக்தி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

வி3 விஜயராகவன் மீது புகார்: பின்னர் மற்றவர்களை விடுவித்த போலீசார், சக்தி ஆனந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் சக்தி ஆனந்த் விடுவிக்கப்பட்டார். சக்தி ஆனந்த் ஜாமீனில் வெளியே வந்ததுமே, தங்கள் மை வி3 ஃபேமிலி உறுப்பினர்களுக்கு வருமானம் தொடர்ந்து வரும் என்று ஆடியோ வெளியிட்டார்.

இதற்கிடையே, இதன் தொடர்ச்சியாக மை வி3 ஏட்ஸ் நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகியோர் இணைந்து நடத்தியதாகவும், 600 ரூபாய் செலுத்தி ஒரு தயாரிப்பை வாங்கிய பின்னர், விளம்பரம் பார்த்தால் வருமானம் வரும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

விஜயராகவனின் பினாமியா?: மேலும், 18 ஆயிரம் ரூபாய் கட்டி 6 நபர்களை சேர்த்து விட்டால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் எனவும், 1 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினரானால் மாதம்தோறும் வருமானம் வரும் என்றும் கூறியதாகவும், இதனை நம்பி பலர் முதலீடு செய்த நிலையில், இரண்டு ஆண்டுகள் முறையாக பணம் அளித்து வந்த அந்த நிறுவனம், திடீரென ஒரே நாளில் மூடப்பட்டு, பணம் வருவது நிறுத்தப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்தனர்.

V3 ஆன்லைன் டிவி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டைரக்டராக இருந்த சக்தி ஆனந்த் என்பவரை வைத்து தற்போது மை வி3 ஆட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் துவங்கி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். சக்தி ஆனந்த், விஜயராகவனின் பினாமி. விஜயராகவனை தான் குருஜி என்று அழைக்கின்றனர் என்றும், இந்த நிறுவனத்தையும் விரைவில் மூடி விடுவார்கள் என்றும், இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்படும் விஜயராகவனை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் அளித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி: இதுதொடர்பாக கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மை வி3 நிறுவனம் மூலமாக சப்ளை செய்யப்படும் 80க்கும் மேற்பட்ட ஹெர்பல் தயாரிப்புகளை தயாரித்துள்ள நிறுவனத்தை நடத்தி வருவது விஜயராகவன் எனத் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, விஜயராகவன் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

போலி பிஎச்.டி பட்டம்: விஜயராகவன், தான் நேச்சுரோபதியில் பி.எச்.டி பட்டம் பெற்றதாக பட்டத்தின் நகலை அளித்துள்ளார். அதை சான்றிதழ் சரிபார்ப்புக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அந்த டாக்டர் பட்டச் சான்றிதழ் போலியானது எனத் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை போலி சான்றிதழ் வழக்கில் கைது செய்துள்ளனர்.

மை வி3 மூலம் விற்பனை செய்யப்படும் ஹெர்பல் புராடக்ட்களை சப்ளை செய்த நிறுவனத்தை நடத்தி வந்த விஜயராகவன் போலியாக பட்டம் பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், மை வி3 மூலம் வழங்கப்பட்ட ஆயுர்வேத கேப்சூல் உள்ளிட்ட பொருட்கள் எதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டன என்ற மிகப்பெரிய சந்தேகமும் எழுந்துள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் தீவிரமாக வெடிக்கும் எனக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+