Siruvani dam: இந்த ஆண்டில் முதல்முறையாக சிறுவாணி நீர்மட்டம் 40 அடியை நெருங்கியது! கோவை மக்கள் ஹேப்பி
கோவை: சிறுவாணி அணையின் நீர் மட்டம், இந்த ஆண்டில் முதல்முறையாக 40 அடியை நெருங்கி உள்ளது. கோவை மாநகரின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 96.22 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 44.61 அடி. தற்போது நீர்மட்டம் 39.13 அடியை எட்டியதால் அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே உள்ளது.

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது சிறுவாணி அணை. இது பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. பின்னர், வழியோரம் உள்ள 22 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், கோவை மாநகராட்சியின் 30 க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
சிறுவாணி அணையின் மொத்த உயரம், 49.53 அடி. கேரளா அணை பாதுகாப்பு ஆணைய உத்தரவுப்படி 44.61 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். போதிய மழை இல்லாததால் மே மாத துவக்கத்தில், 17 அடிக்கும் குறைவாகவே அணையின் நீர்மட்டம் இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், நல்ல மழை பெய்ததன் காரணமாக சிறுவாணி அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. கடந்த சில நாட்களில் மட்டும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சுமார் 23 அடிக்கு மேல் உயர்ந்து உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் முதல் முறையாக 40 அடியை நெருங்கியது. நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் மொத்த உயரம், 49.53 அடி. கேரளா அணை பாதுகாப்பு ஆணைய உத்தரவுப்படி 44.61 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும்.
தற்போது நீர்மட்டம் 39.13 அடியை எட்டியது. இன்னும் அணை நிரம்ப 5 அடி மட்டுமே உள்ளது. சிறுவாணி அணை பெருகி இருப்பதால் இந்த ஆண்டு கோவை மக்களுக்கு தங்கு தடையின்றி சிறுவாணி குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறவும் பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
-
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications