கையெழுத்து இயக்கம்! 10 லட்சம் பேர் இலக்கு! சவுமியா அன்புமணியின் மெகா பிளான்! கோவையில் நடந்த கூட்டம்!
கையெழுத்து இயக்கம் தொடங்கும் திட்டத்தில் சவுமியா அன்புமணி.
கோவை: கோவையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ள சவுமியா அன்புமணி, விரைவில் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கவிருக்கிறார்.
10 லட்சம் பேர் கையெழுத்திடும் வகையில் பிரம்மாண்ட திட்டத்தை வகுத்து வரும் சவுமியா அன்புமணி அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் பசுமைத் தாயகம் அமைப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பசுமை தாயகம்
பசுமை தாயகம் அமைப்பு சார்பில் "நொய்யலாறு" மீட்பிற்கான கருத்துரையாடல் கூட்டம் கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பசுமை தாயகத்தின் தலைவரும், அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சவுமியா அன்புமணி கலந்து கொண்டு விவசாயிகள், தொழிற்துறையினர், சமூக, சுற்றுச்சூழல், வன ஆர்வலர்கள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு குழுக்களுடன் கலந்துரையாடினார்.

கொங்கு செழித்தால்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி, கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பழமொழியை கூறி, நொய்யல் ஆற்றை மையபடுத்தி உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் இணைத்து பசுமை தாயகம் சார்பில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்கிறோம் என்றார். இந்த நொய்யல் ஆற்றை காப்போம், நொய்யல் ஆற்றை மீட்பதற்காக நடத்தபட்ட கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் நிறைய கருத்துகளை எடுத்துக் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

நொய்யல் ஆறு
நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தி மீட்க மாவட்ட வாரியகாவோ அல்லது தாலுக்கா வாரியாகவோ, ஒற்றுமையான ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார். குறைந்த செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றவர் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் ,மூன்றாம் கட்டம் என பல நிலைகளில் இப்பணிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைப்பதாக தெரிவித்தார். நொய்யலாற்றை மீட்க பத்து லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தலாம் என்ற முடிவு செய்யபட்டுள்ளதாக சவுமியா அன்புமணி கூறினார்.,

அரசியல் கட்சிகள்
மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரிப்பது குறித்து பேசிக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்த நொய்யலாறு பிரச்சனையை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அவர்களது கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
நொய்யல் ஆற்றை மீட்க மாதம் ஒரு கூடி என்னென்ன செய்யலாம் என பேச யோசித்து வைத்திருப்பதாகவும், அரசியல் கட்சிகளில் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட முயற்சி செய்து வருவதாக கூறினார்.

முடித்து காட்டுவோம்
இன்று சமூக அமைப்புகள் மட்டும் தான் ஒன்றிணைந்திருக்கறோம் என்றும் விரைவில் அரசியல் கட்சிகளை சந்திப்போம் என்றார். தாங்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை நல்ல முறையில் முடித்து காட்டுவோம் என்பதற்க்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டத்தை கூட்டி நொய்யல் ஆற்றை பற்றி விரிவாக விவாதித்திருப்பதாக தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications