ஆதரவாளர்களை தவெகவுக்கு அனுப்பி வைக்கும் எஸ்பி வேலுமணி.. பின்னணியில் மெகா திட்டம்.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் எம்பி மடத்துக்குளம் மகேந்திரன், தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் முத்து வெங்கடேஷ் ஆகியோர் தவெக பக்கம் சாய்ந்த நிலையில், இதன் பின்னணியில் எஸ்பி வேலுமணி இருப்பதாக சொல்லப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு பின் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தனி அணியாக செயல்பட்டனர். இதில் விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகிவிட்டார். சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சமரசம் செய்தார்.

SP Velumani

ஆனால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை எஸ்பி வேலுமணி உள்ளிட்ட யாருக்குமே கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி எம்எல்ஏ-க்களாகவே செயல்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ல் நடக்கவுள்ளது. இதன் முடிவுகள் அதிமுகவுக்கு எதிராக வந்தால், மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும்.

இதற்காக எஸ்பி வேலுமணி தரப்பு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தால், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்களை இழுக்க எஸ்பி வேலுமணி தரப்பு தயாராகி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் பக்கம் வந்துவிட்டால், அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்று எஸ்பி வேலுமணியும், சிவி சண்முகமும் கணக்கு போடுவதாக தெரிகிறது.

இதன்பின் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எஸ்பி வேலுமணி தனது ஆதரவாளர்களை தவெகவுக்கு அனுப்பி வைத்து வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்பி மடத்துக்குளம் மகேந்திரன், தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் முத்து வெங்கடேஷ் ஆகியோர் தவெக பக்கம் சாய்ந்திருக்கின்றனர்.

இவர்கள் எஸ்பி வேலுமணியின் அனுமதியுடனே தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் திரை மறைவில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை எஸ்பி வேலுமணி அரங்கேற்றி வருவதாக முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+