ரோல்ஸ் ராய்ஸ் கார்.. 147 கோடி சொத்து.. கோவை அதிமுகவில் வேலுமணியைவிட ஒரு பணக்கார வேட்பாளர்
கோவை : தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை அதிமுகவில் வேலுமணியை விட பணக்கார வேட்பாளர் ஒருவர் களம் காண்கிறார். ரோல்ஸ் ராய்ஸ் கார் ரூ.147 கோடி சொத்து என்று வேலுமணியை விட அதிகம் சொத்து மதிப்பை கொண்டுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.பி.வேலுமணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பிரமாண பத்திரத்தில், அவருடைய விவசாயம் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டபோது வேலுமணி தன்னிடம் ரூ.57.65 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.3.03 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், கடன் ஏதும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

வேலுமணி சொத்து விவரம்
தற்போது அவர் தன்னிடம் ரூ.1.35 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.5.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இப்போதும் கடன் இல்லை. வேலுமணி பெயரில் ஒரு லாரி மட்டுமே உள்ளது. மகளிடம் 2,020 கிராம் தங்கம், மனைவி பெயரில் 1,360 கிராம் தங்கம், தன்னிடம் 80 கிராம் தங்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரூ.19.20 கோடி மதிப்பிலான வருமான வரி நிலுவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வேலுமணி, அவரின் மனைவி வித்யா, மகள் சாரங்கி ஆகியோரின் பெயர்களில் மொத்தமாக ரூ.13.10 கோடி சொத்து உள்ளது. கோவை அதிமுகவின் ஒற்றை முகமாக இருப்பவர் வேலுமணி. ஆனால் வேலுமணியை விட அங்கு பணக்கார வேட்பாளர் ஒருவர் அதிமுகவில் இருக்கிறார்.
சிங்காநல்லூர் வேட்பாளர் சொத்து
சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர் ஜெயராம் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே அங்கு சிட்டிங் எம்எல்ஏ இருக்கிறார். ஜெயராமன் நேற்று தான் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது தன்னிடம் ரூ.12.68 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.75.74 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகளும் 3 கார்களும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ரூ.147 கோடி சொத்து
இந்தத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடும் கே.ஆர்.ஜெயராம் தன்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 8 கார்களும், மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.59.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ரூ.66.54 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் செய்து வரும் அவரிடம் மொத்தம் ரூ.147 கோடி சொத்து உள்ளதாக கூறியுள்ளார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications