சுமார் 6 மணி நேரத்திற்கு பின்.. எஸ்.பி வேலுமணி உட்பட 9 அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு! நடந்தது என்ன
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 9 சட்டசபை உறுப்பினர்கள் 6 மணி நேரத்திற்குப் பின்பு விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

தர்ணா போராட்டம்
இதனிடையே நேற்றைய தினம் கோவை ஆட்சியர் வளாகத்தில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட திமுகவினரை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோவை ஆட்சியர் வளாகத்தில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 9 அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விடுவிப்பு
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும், அவர்கள் அதற்கு மறுத்ததால் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுமார் 6 மணி நேரம் வரை அவர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும், கோவையில் வெளியாட்கள் யாரும் இல்லை என மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ் பி வேலுமணி, "நகர்ப்புற தேர்தலை நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனநாயக முறையில் போராடினோம். ஆனால் காவல்துறை எங்களைக் கைது செய்துள்ளனர். தேர்தல் விதிக்கு எதிராகவும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். போலீசாரும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.

ஜனநாயக படுகொலை
தேர்தல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என அதிமுகவினர் நினைக்கிறோம், ஆனால் வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட திமுகவினர் இன்னும் கூட வெளியேற்றப்படவில்லை. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கத்தி குத்து, அடிதடி நடைபெற்று வருகிறது. தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குண்டர்களை வைத்தும், ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுத் தேர்தலை திமுகவினர் சந்திக்கிறது.

நீதிமன்றம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றமும் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளைத் தாமதப்படுத்தாமல் யார் வெற்றி பெற்றார்களோ அவர்களை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவைக்குச் சிறப்புத் தேர்தல் பார்வையாளராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய செயல்பாடும் வந்தால்தான் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்,
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications