கோவை மக்களுக்கு சர்ப்ரைஸ்.. சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த வேலுமணி.. இவ்வளவு பரிசுகளா
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டி வழங்கியது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு மத்தியில் கோவையில் அதிமுக சார்பாக மக்களுக்கு வீடு வீடாக ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி சத்தமே இல்லாமல் சம்பவம் செய்துள்ளார் எஸ்.பி. வேலுமணி.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே முடிவு எடுக்கவில்லை.

வேலுமணி செந்தில் பாலாஜி மோதல்
அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக மண்டல வாரியாக மகளிரணி, இளைஞரணி, பூத் கமிட்டி பயிற்சியாளகள் மாநாடு நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத் தொகையை கோடை கால சிறப்பு தொகையுடன் முன் கூட்டியே வழங்கியுள்ளனர். திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்து வருகிறது.
கொங்கு மண்டலத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. அதிமுக - பாஜக வலுவாக உள்ள அந்த பகுதியில் தங்கள் கொடியை நட்ட திமுக தீவிரம் காட்டி வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வைப்பதற்காக அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கங்கனம் கட்டி கொண்டு வலம் வருகிறார்.
கோவைக்கு வேலுமணி சர்ப்ரைஸ்
கோவை எப்பவுமே எங்கள் கோட்டை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வியூகம் வகுத்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் மேலும் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளனர். கோவை அதிமுக சார்பில் மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் பரிசுப் பொருட்களை வழங்க வேலுமணி பிளான் திட்டமிட்டார். வீடு வீடாக சென்று அதிமுகவினர் டோக்கன் வழங்கும் பணியை நிறைவு செய்தனர்.
ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகள்
கடந்த சில நாட்களாக பரிசு பொருட்களின் விநியோகத்தையே அதிமுகவினர் தொடங்கிவிட்டனர். அனைத்து வீடுகளுக்கும் ஒரு ஹாட் பாக்ஸ், தட்டு, வேஷ்டி, சட்டை சேலை வழங்கப்படுகிறது. எஸ்.பி வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் கூடுதலாக ஒரு தண்ணீர் பாட்டில், குடை வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுக தெருமுனை கூட்டங்களில் இந்தப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், அந்தந்த பகுதிகளில் தனி டீம் அமைத்து வீடு வீடாக சென்றும் பரிசு பெட்டிகளை டெலிவரி செய்து வருகிறார்கள். 2022 உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி கோவை முழுவதும் ஹாட் பாக்ஸ், கொலுசு கொடுத்து கோவை தட்டி தூக்கினார். அதே பாணியில் வேலுமணி ஹாட் பாக்ஸ் வழங்கி செந்தில் பாலாஜிக்கு செக் வைத்துள்ளார்.
-
தன்மான பிரச்சனை.. கோவையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலுமணி மாஸ்டர் பிளான்.. கவுன்டவுன் ஸ்டார்ட் -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications