ஆளுநரிடம் புகார் தந்த மாணவனால் பரபரப்பில் பாரதியார் பல்கலைக் கழகம்! ஆக்ஷனில் அமைச்சர்
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த மனுவை பட்டமளிப்பு விழா மேடையில் ஆளுநரிடம் மாணவர் அளித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விழா முடிந்தவுடன் பல்கலையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநளுர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.
அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

அந்த மனுவில் மாணவர் கூறியிருந்ததாவது: மதிப்பிற்குரிய ஐயா. இந்தக் கடிதத்தின் மூலம் உங்களைச் சந்திப்பதில் நான் (நாங்கள்) மகிழ்ச்சியடைகிறேன். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கீழ்க்கண்ட பிரச்சனைகளை சந்திக்கும் நிலை உள்ளது.
1. பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
2. பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகள் உள்ளன. ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.
3. வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள பணம், உணவு மற்றும் சில வழிகாட்டிகளுக்கு தங்கம் வழங்குகின்றனர்.
4. பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.75 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரூ. 75 லட்சம், விடுதி பராமரிப்புக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒதுக்கப்பட்ட பணம், விடுதி பராமரிப்புக்கு முறையாக பயன்படுத்தப்படுவதில்லை.
5. பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாட்டு தினம் நடத்தப்படவில்லை. ஆனால், விளையாட்டுக்கான பணம் ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் வசூலிக்கப்படுகிறது. பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மைதானத்தை பயன்படுத்தக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே மைதானத்தை வெளியாட்கள் வார இறுதி நாட்களில் வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன. மேற்கண்ட பிரச்சனைகளுக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார். விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications