கோவையில் அம்மன் சிலையை உற்று பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்! கோயிலில் மக்களுக்கு சர்ப்ரைஸ்
கோவை: கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் கோயிலில் சிறப்பு அதிசயம் ஒன்று நடைபெற்றது.. கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர் சொன்ன தகவல் தீயாய் பரவி கோவை மாவட்டம் முழுவதும் ஆச்சரியத்தையும் வியப்பையும் தந்துவிட்டது.. என்ன நடநதது கோவை மாவட்டத்தில்?
கோவை நகரின் ஒரு பழமையான கோயில் கோவை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலாகும்.. இந்த கோவிலின் மண்டபங்களும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த கோவில் மாகாளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.. மிகவும் சக்தி தேவி என்று கருதப்படுகிறார்.

கோவை அம்மன் கோவில்
இந்த கோவில் மக்கள் நம்பிக்கையின் முக்கியமான இடமாக விளங்குகிறது.. பலர் குடும்ப நலன், சுகாதாரம், வளம், தங்கள் கஷ்டங்களிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக இந்த கோவிலை பக்தர்கள் நாடி வந்து வழிபட்டு செல்கிறார்கள்..
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும். குறிப்பாக பங்குனி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தீபம், பூஜை, விரதம் போன்ற சிறப்பு விழாக்கள் மிகுந்த பிரத்யேகமாக நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களில் மக்கள் பெருமளவு கலந்து கொள்கிறார்கள்.
குழந்தை பாக்கியம்
கோவிலின் கட்டிடக்கலை பழமையான தமிழ் சிற்ப கலை மற்றும் தோற்ற வடிவமைப்பில் மெருகேற்றப்பட்டு காணப்படும். கோயிலின் மண்டபங்கள், சில சிற்பங்கள் மற்றும் கலை வடிவங்கள் பார்வையாளர்களுக்கு மனசார்ந்த அமைதியையும் ஆன்மீக உணர்வையும் தருகின்றன.
இங்கு வந்து வேண்டிக் கொண்டால் பெரும்பாலும் குழந்தை பாக்கியம் வேண்டியும், வேலைவாய்ப்பு, பொருளாதார நலம் போன்ற நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது..
சித்திரை திருவிழா
ஆலயத்தின் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாக நடைபெறும் என்பதால், இந்த முறையும் பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் நேற்றைய தினமும் கோவை டவுன்ஹாலில், என்.ஹெச். சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இந்த ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது..
வழக்கமாக காலை நேரத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும். அப்படித்தான் நேற்றையதினமும் பூசாரி அலங்காரம் செய்து பூஜை செய்து கொண்டிருந்தார்.. அப்போது ஒரு பெண் பக்தர் அங்கே வந்தார்... அவர் கோயிலில் உள்ள அம்மனின் வலதுபுறக் கண் திறந்து இருப்பதாக கவனித்து, உடனடியாக பூசாரியிடம் தெரிவித்தார்.
கண் திறந்த மாகாளியம்மன்
அடுத்த சில நிமிடங்களிலேயே 'மாகாளியம்மன் சிலை கண் திறந்துவிட்டது' என்ற செய்தி காட்டுதீ போல கோவை முழுவதும் பரவியது. பிறகு ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள், ஆலயத்துக்கு படையெடுத்து வந்தனர்.. சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தரிசனம் செய்து பிரார்த்தனையும் செய்தனர்.
பக்தர்கள் மகிழ்ச்சியுடன், மனதில் பூரண நம்பிக்கையுடன், அம்மனின் அருளை காண குவிந்தபடி இருந்தனர்.. இதனால் காலை முதல் ஆலய வாசல்கள் நிரம்பி வழிந்தன.. மகாளியம்மன் சிலையின் கண் திறந்துவிட்டது என்று பரவிய செய்தி பக்தர்களுக்கு ஆன்மீக உற்சாகத்தையும், பக்தி பரவசத்தையும் ஏற்படுத்தியது..
இப்படி இந்த கோயிலின் அம்மன் கண் திறப்பது இது முதல் முறை கிடையாது.. கடந்த 1997 ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த அதிசய நிகழ்வு இப்போது நடப்பதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே இந்த கோயில் விசேஷமானது என்று நம்பப்படும்போது, இப்போது பக்தர்கள் இந்த கோயிலுக்கு திரண்டு வந்தபடி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications