டாப் கியரை போட்ட கோயம்புத்தூர்.. "த்ரீ ஸ்டார்" திகைப்பில் மக்கள்.. அசரடிக்கும் மாநகராட்சி.. என்னவாம்
கோவை மாநகராட்சிக்கு 3 நட்சத்திர அந்தஸ்து சான்றிதழ் பெறும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது
கோவை: கோவை மாநகராட்சி ஒரு புது முயற்சியில் இறங்கி உள்ளது.. இதற்கான ஆதரவை பொதுமக்களிடம் கேட்டு வருகிறது.. என்ன நடக்கிறது கோவையில்?
தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
அதேபோல, மாநகராட்சிகளின் சிறப்பாக செயல்பாடுகளை கண்டு, மத்திய அரசு உட்பட பல்வேறு அமைப்புகளும் பாராட்டுக்களையும், விருதுகளையும் வழங்கி வருகின்றன.

ஸ்டார் அந்தஸ்து
அந்தவகையில், கோவை மாநகராட்சியின் செயல்பாட்டையும் மறுக்க முடியாது.. அடுத்தடுத்த அந்தஸ்தினை பெற்று அம்மாநகராட்சி உயர்ந்து வருவது அம்மாவட்ட மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும், பூரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு சார்பில் "டிஜிட்டல் இந்தியா" விருது வழங்கப்பட்டிருந்தது.. அதாவது, மாநகராட்சி அலுவலகங்களில் இலவச ஒய்-பை திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியது, புதுமையான, நவீன மின்னணு செயல்பாடுகள் ஆகியவற்றுக்காக, கோவை மாநகராட்சிக்கு இந்த விருது கடந்த 7 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது...

ஜெயலலிதா
1848ல்தான் கோவை, ஒரு நகராட்சியாகவே மாறியுள்ளது.. அதற்கு பிறகு, 1981ல் சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்துக் கொண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தென்னிந்தியாவில் 4வது மிகப்பெரிய மாநகராட்சி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.. வர்த்தக தலைநகரம் மும்பைக்கு அடுத்தபடியாக, அதிக தொழில் முதலீடுகளை பெறுவதில் கோவைக்கு முக்கிய பங்குண்டு... கடந்த 2011ம் ஆண்டு மாநகர எல்லையை விரிவாக்கம் செய்தது முக்கியத்துவம் பெற்றது. மக்கள்தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, மாநகராட்சி பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2013ல் பெருநகர மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதையும் மறுக்க முடியாது..

ஆப் விருது
அதேபோல, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டம் சூயஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சமீபகாலமாகவே, குடிநீர் குழாய்,மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற Geosmart India விருது வழங்கும் விழாவில் கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக "சிறந்த புவியியல் தகவல் பயன்பாட்டு செயலி" என்ற விருது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது.. இப்போது கோவை மாநகராட்சி குறித்து முக்கிய தகவல் ஒன்று பரபரத்து கொண்டிருக்கிறது..

ஸ்டார் ரேட்டிங்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கோவை மாநகராட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், த்ரீ ஸ்டார் அதாவது மூன்று நட்சத்திர அங்கீகாரம் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளதாம்.. அதாவது, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் "தூய்மை பாரத திட்டம் 2.0 திடக்கழிவு மேலாண்மை" என்ற திட்டத்தின் கீழ் ஸ்டார் ரேட்டிங் (Star Rating) அங்கீகாரமானது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்டார் ரேட்டிங்கை இந்த முறை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பிலேயே கோவையும் கோதாவில் குதித்துள்ளதாம்..

3 ஸ்டார்கள்
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் அனைத்தும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையே தரம் பிரித்து கையாளப்பட்டு வருகிறது. இதன்மூலம் தூய்மையான மாநகராட்சி என்ற இலக்கை எட்டி கொண்டிருக்கிறது. அதனால்தான், கோவை மாநகராட்சிக்கு குப்பைகள் இல்லா மாநகராட்சியாக மூன்று நட்சத்திர அங்கீகார சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேற லெவல்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஒரு ஸ்பெஷல் அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்... அதில், கோவை மக்கள் இதுதொடர்பாக தங்களது ஆட்சேபனைகள், கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், 15 நாட்களுக்குள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை வழங்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்... வேற லெவலுக்கு உயர்ந்து வரும் கோவைக்கு, இந்த த்ரீ ஸ்டார் அந்தஸ்து கிடைக்குமா?
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications