Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடையில் இது மட்டும் நடந்தால்.. பொள்ளாச்சிக்கே பிறக்கு போகும் விடிவு.. அமைச்சர் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியை தமிழக அரசு கூறியிருக்கிறது.. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த தகவலை கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தேங்காய் மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஆனால் அரசுகள் ஏனோ இந்தியாவிலேயே விலையாத பாமாயிலை இறக்குமதி செய்து தருகின்றன. கோடிகளை வெளிநாடுகளில் கொட்டி எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு பதில் நம் ஊரில் விளையும் தேங்காய் மற்றும் நிலக்கடலை எண்ணெய்யை வழங்கினால் நம் விவசாயிகள் வளம் பெறுவார்கள் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக அரசுகள் கிடப்பில் போட்டுள்ளன.

Tamil Nadu government considering distribution of coconut oil in ration shops: Good news for farmers

வெளிநாடுகளில் சாராயத்தை இறக்குமதி செய்ய அனுமதி தரும் அரசுகள், தமிழ்நாட்டில் பனை, தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கள்ளை இறக்குமதி செய்ய அரசு இன்று வரை அனுமதி தரமறுக்கிறதோ அதுபோல் தான் தேங்காய் எண்ணெய் விஷயத்திலும் நடக்கிறது. இந்த இரண்டையும் அரசுகள் அனுமதித்தால் உண்மையில் விவசாயிகள் மிகப்பெரிய லாபம் தரும் தொழிலை நோக்கி பயணிப்பார்கள்.. ஆனால் ஏனோ இன்று வரை அது அவர்களின் கனவாகவே இருக்கிறது.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விநியோகிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பட்ஜெட் குறித்து கோரிக்கை வைத்திருந்தார். அப்போது அவர் கூறும் போது, "கொப்பரைத் தேங்காய், நிலக்கடலை ஆகியவற்றுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து விட்ட நிலையில், உழவர்களின் நலன் கருதி நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு அதிக செலவு ஆகாது. ஆனாலும், உழவர்கள் நலனில் அக்கறை இல்லாததால் அந்தத் திட்டத்தை நடப்பு நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். ராமதாஸ் மட்டுமல்ல ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் இதுபற்றி கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னையில் வேர்வாடல் நோய் தாக்குதல் இந்த முறை பலமாக உள்ளது. இந்த நிலையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பொள்ளாச்சி வந்தார். பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் நோய் பாதித்த தென்னை மரங்களை பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகள் அவரிடம் கூறும் போது, அப்போது நோய் தாக்கிய தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதை தவிர வேறு வழியில்லை, இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது, எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல்பாண்டியன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி, கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் தென்னை மரத்தில் ஏற்பட்டுள்ள நோயின் தாக்கம் குறித்து அதிகாரிள் அமைச்சரிடம் விளக்கினார்கள்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் பேசுகையில், " பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் 20 சதவீத தென்னை மரங்கள் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்களுக்கு இயற்கை உரங்கள், சத்துக்கள் நிச்சயம் அரசின் சார்பில் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நிவாரணம், இழப்பீடு வழங்க தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை பலப்படுத்தி தென்னை விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். தென்னையை தாக்கும் நோய் விரைவில் கட்டுப்படுத்தப்படும்" என்றார்.

கள ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தென்னை சாகுபடி பரப்பினை அதிகரிக்க தமிழக அரசின் 2024-25 நிதியாண்டில் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மண்ணின் தன்மையை பாதுகாக்க ரூ.206 கோடியில் மண்ணுயிர் காப்போம் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. தற்போது தென்னைக்கு இன்சூரன்ஸ் திட்டம் இல்லாமல் உள்ளது. தென்னைக்கும் இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளிடம் இருந்து 89 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொப்பரை தேங்காய்க்கு கிலோ ரூ.115, பந்து கொப்பரை தேங்காய்க்கு கிலோ ரூ.120 என விலை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் வழங்குவது பரிசீலனையில் இருக்கிறது" இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+