தமிழக எம்.பி.க்களுக்கு தனி அலுவலகம் வேண்டும்.. ஜோதிமணி வைத்த முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றுவதற்கு ஏதுவாக எம்.பி.க்களுக்கு தனி அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

tamil-nadu-govt-should-build-separate-offices-for-mps-says-jothimani

தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனத் தனி அலுவலகம் கிடையாது. எம்பிக்கள் மக்கள் பணியாற்றுவதற்கு ஏதுவாக தமிழக அரசு தனியாக அலுவலகம் கட்டிக் கொடுக்க வேண்டும். எம்பிக்கள் யாரும் அரசிடம் கார் கேட்கவில்லை, அனைவரிடமும் கார்கள் உள்ளன. பெட்ரோலில் எத்தனால் கலப்பதை மத்திய பாஜக அரசு தன்னிச்சையாகச் செய்து வருகிறது.

இதனால், வாகன என்ஜின்கள் பழுதானால் என்ன செய்வது?. வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்காமல் எத்தனால் கலந்த பெட்ரோலைக் கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. நரேந்திர மோடியை வீழ்த்தும் ஆற்றல் ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் 33 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் தெளிவாக இருக்கிறார்.
அதனடிப்படையில், சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை நிலைப்பாடு கிடையாது. காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் தீர்ப்பை ஏற்கிறோம். அதேவேளையில் மேகதாதுவில் அணை கட்ட ஒரு கல்லைக்கூட வைக்க விடமாட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+