தென்னைமரத்தில் ஒரு குத்து.. பனை மரத்துல ஒரு குத்து.. கலவை சோறு.. விஜய் தவெகவை வெளுத்த அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

கோவை: இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, நடிகர் விஜய் கட்சியின் பெயரை குறிப்பிடாமல், பல்வேறு சித்தாந்தங்கள், தலைவர்கள் படத்தைப் போட்டுக் கொண்டு ரசம்- தயிர்- சாம்பார் இணைந்த சாப்பிட முடியாத கலவை சோறு கட்சியாக செயல்படுகின்றனர் என மறைமுகமாக விமர்சித்தார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: இன்னைக்கு சிலர் எதிலும் மாட்டாம சென்ட்டரில் சுத்துறான்.. கிச்சடி பாலிட்டிக்ஸ் செய்கிறார்கள். வடிவேலு சொல்ற மாதிரி தென்னை மரத்தில ஒரு குத்து.. பனை மரத்துல ஒரு குத்து... இந்த சித்தாந்தத்தில் கொஞ்சம்.. அந்த சித்தாந்தத்தில் கொஞ்சம்... இந்த தலைவர் போட்டோவை இங்க போடு.. அந்த தலைவர் போட்டோவை அங்க போடு.. மொத்தமாக 10 தலைவர்கள் போட்டோவை போட்டுவிட்டால் யாரும் நம்மை விமர்சிக்கவே மாட்டாங்க என நினைக்கிற அரசியல் கட்சிகளும் இங்கே வந்துள்ளது.

actor vijay annamalai

அவங்களையே கூப்பிட்டு கேளுங்க.. அது எப்படிங்க? ரசம் சாதத்தையும் தயிர் சாதத்தையும் சாம்பார் சாதத்தையும் கலந்து வைத்துவிட்டு இது ஒரு புது ஐட்டம் என்றால் எப்படி சாப்பிடுவாங்க? ரசம் சாதம் அப்படின்னு சொல்லுங்க.. தயிர் சாதம்னு சொல்லுங்க.. சாம்பார் சாதம்னு சொல்லுங்க.. 3 சாதத்தையும் சேர்த்து மக்கள் சாப்பிடுவாங்களா? என்றா மக்கள் சாப்பிடமாட்டார்கள். அந்த அரசியல் உலகத்தில் எங்கேயும் ஜெயித்ததும் இல்லை.

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட வேண்டும். அதில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். இதில் உள்ள நன்மைகளை மக்களிடம் சொல்வதற்குதான் இப்போதைக்கு தலைவர்கள் தேவை. அதை நாம் செய்ய வேண்டும்.

இந்தியாவில் வெட் கிரண்டர்கள் தயாரிப்பில் கோவைதான் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் தற்போது குஜராத்தின் அகமதாபாத் அந்த இடத்தைப் பிடித்துள்ளது. அப்படியானால் ஏன் இந்த இடத்தை கோவை தவறவிட்டது? என்ன நடந்தது என்பதை அனைவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+