கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொங்கு மண்டலத்தில் பாஜகவினராகவே உருமாறிய அதிமுவினர்... காவிமயத்தில் பிரசாரம்- நொந்து போன சீனியர்கள்!

Google Oneindia Tamil News

கோவை: கொங்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகளில் காவி உடையில் அதிமுகவினர் ஆற்றும் களப் பணியால் அதிர்ந்து போயிருக்கின்றனர் அக்கட்சியின் சீனியர்கள்.

திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்சிகளை அப்படியே கபளீகரம் செய்து அந்த இடத்துக்கு முன்னேறுவது என்பதுதான் பாஜகவின் போக்கு. மேற்கு வங்கத்தில் இடதுசாரி வாக்கு வங்கியை அப்படியே காவியமயமாக்கிவிட்டது பாஜக.

இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய இடதுசாரிகள், காவி கொடியுடன் ஜெய்ஶ்ரீராம் என முழங்குகின்றனர். இதனால் இடதுசாரிகள் இடத்தில் பாஜக நிற்கிறது. இடதுசாரிகள் தலைமை இதை அப்போதே கண்டுகொள்ளாமல் விட்டதால் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் இருப்புக்கே போராடும் நிலையில் உள்ளனர்.

கொங்கு அதிமுகவுக்கு குறி

கொங்கு அதிமுகவுக்கு குறி

இதேபாணியைத்தான் இப்போது தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது பாஜக. முதல் கட்டமாக அதிமுக வாக்கு வங்கி வலிமையாக உள்ள கொங்கு மண்டலத்தில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக நிர்வாகிகளுக்கு பதவிகளுக்கு ஏற்ப பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வைத்துள்ளது பாஜக.

காவிமயமாக அதிமுக நிர்வாகிகள்

காவிமயமாக அதிமுக நிர்வாகிகள்

அத்துடன் அன்றாட செலவுகளுக்கு தனி தொகையும் தந்துவிடுகின்றனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் கட்சி கரை வேட்டி, துண்டை உதறிவிட்டு காவி மயமாக காட்சி தருகின்றனர். எந்தவித அசூயையும் இல்லாமல் இரட்டை இலையும் தாமரையும் ஒன்றுதான். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சின்னமே தாமரைதான் என அதிமுகவினரே பிரசாரம் செய்கின்றனர்.

அதிமுகவுக்கு நோ ரிட்டன்?

அதிமுகவுக்கு நோ ரிட்டன்?

கொங்கு மண்டலத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் விரல்விட்டு எண்ணக் கூட்டிய அளவுக்குதான் அக்கட்சியின் ஒரிஜனல் நிர்வாகிகள் இருந்தனர். ஆனால் இப்போது ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளுமே பாஜகவினராகவே உருமாறிவிட்டனர். இனி அவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவார்களா? என்பது கூட சந்தேகம் என்கிற நிலைதான் உள்ளது.

அதிமுக எதிர்காலம்?

அதிமுக எதிர்காலம்?

இதனால் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக என்கிற கட்சியின் அடிப்படை கட்டமைப்பு அப்படியே பாஜகவாகி போய்க் கொண்டிருக்கிறது. இந்த பார்முலாவை அத்தனை தொகுதிகளிலும் பாஜக செயல்படுத்தினால் தமிழகத்தில் அதிமுக என்கிற கட்சியே இல்லாமல் போய்விடும். இதனை அதிமுக தலைமை எப்படி கட்டுப்படுத்தப் போகிறது? என்பதுதான் தெரியவில்லை என்கின்றனர் சீனியர்கள்.

அதிமுக இடத்தில் பாஜக

அதிமுக இடத்தில் பாஜக

ஏற்கனவே திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை அப்படியே விழுங்கித்தான் பாஜக ஆளும் கட்சியானது. மேற்கு வங்கத்தில் லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளை வ்வளைத்த பாஜக இம்முறை ஆளும் திரிணாமுல் காங்கிரசாரை ஆட்டைய போட்டுவிட்டனர். இதனால் மேற்கு வங்கத்தில் மிக வலிமையாக இருக்கிறது பாஜக. தமிழகத்திலும் போகிற போக்கைப் பார்த்தால் அதிமுக இடத்தில் இனி பாஜகதான் என்கிற நிலைமை நெருங்கிவிட்டதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.

English summary
AIADMK cadres campaign with Saffron Identity for BJP in Kongu Belt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X