அடடே அசத்துதே தமிழக அரசு.. கோவை இளைஞர்களுக்கு ChatGPT பயிற்சி.. ’இந்த’ தேதியை மட்டும் மறக்காதீங்க!
கோவை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி வரும் 31.01.2025 தேதி கோவையில் நடைபெற உள்ள நிலையில், தொழில் முனைவோர் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய தொழில்களை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகத் தொழில் முதலிட்டார் மாநாடு மூலம் ஏற்கனவே பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

வேலைவாய்ப்பு மட்டும் இன்றி இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் தொழில் முனைவோர் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சாட் ஜிபிடி மூலம் தமிழ்நாடு அரசு பயிற்சி அளிக்கிறது.
இதற்கான முகாம் கோவையில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்.
பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்:
ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள்: ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக் கொள்ளுங்கள்.
தெளிவான இலக்கு நிர்ணயம்: ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக் கொள்ளுங்கள்.
மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்.
கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும். ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.
நேரடி சிக்கல் தீர்வு: இடுகையாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில், ChatGPT மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்கவும்.
பங்கேற்பாளர்கள் 100-க்கு மேற்பட்ட செயல்திறன் கொண்ட ChatGPT ப்ராம்ப்ட்டுகளுடன் ஒரு பிரத்யேக மின்புத்தகத்தையும், அன்றாட ப்ராம்ப்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்அப் சமூக அணுகலையும் பெறுவார்கள்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் - 8072 799 983/90806 09808. முன்பதிவு அவசியம். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications