மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைதான் தமிழக அரசின் கல்வி கொள்கை... மத்திய அமைச்சர் சுபாஷ் சர்கார்
கோவை: மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை அல்லது தேசிய கல்வி கொள்கையைத்தான் தமிழக அரசு பின்பற்றி வருகிறது என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் அடித்துச் சொல்லி இருக்கிறார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் - சித்தூர் இயக்குனர் குழுவின் தலைவரும், நாஸ்காம் அமைப்பின் ஐசிசி கவுன்சிலின் முன்னாள் தலைவருமாகிய பாலசுப்பிரமணியம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஆத்ம நிர்பர் திட்டத்தின் கீழ் இந்தியா உலக அளவில் முன்னோடி நாடாக மாறி வருகிறது என்றும் இளைஞர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

புதிய கல்வி கொள்கை
குறிப்பாக, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம், ஸ்கில் இந்தியா திட்டம் ஆகியவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல், தொழில்முனைவோராகவும் அவர்களை உருவாக்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அது இன்றைய தேவையாக உள்ளது எனவும் கூறிய அவர், பட்டம் பெறும் இளைஞர்கள் கல்வியறிவு மட்டுமின்றி நமது பாரம்பரியம் கலாச்சாரம் குறித்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எங்க கொள்கைதான் அது..
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுபாஷ் சர்கார் தமிழக அரசும், மாநில கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையையே பின்பற்றியே வருகிறது என்றார். தேசிய கல்விக் கொள்கை ஆவணம் பொது மக்களின் பார்வைக்காக இணையதளத்தில் உள்ளது என்றும், 65 பக்கங்கள் கொண்ட அதனை படித்துப் பார்த்தால் தமிழக அரசின் கல்விக் கொள்கையிலும், தேசிய கல்விக் கொள்கையிலும் ஒற்றுமை இருப்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மத்திய கல்வி நிறுவனங்கள்
மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் சிறந்த கல்வி முறைக்கான பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை பெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அவர் உறுதியளித்தார். தேசம் முழுவதும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மிகவும் பிரபலமான கல்விமுறையாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பொறியியல் கேள்வி தாள்
தமிழக அரசின் கல்விக் கொள்கை மேலும் தரமாக இருந்தால் அதன் நல்ல அம்சங்களை தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மத்திய கல்வித்துறை ஏற்கனவே சிறந்த கல்வி முறைகள் குறித்து பரிந்துரைக்குமாறு அனைத்துமாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.அனைத்து உயர்கல்வியும் தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்றும் அதை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 12 மாநில மொழிகளில் பொறியலுக்கான கேள்வி தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய கல்வித்துறை இணைமைச்சர் சுபாஷ் சர்கார், முதலாம் ஆண்டு புத்தகங்கள் அனைத்தும் தமிழ் உட்பட 12 மாநில மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications