வானில் வர்ணஜாலம் காட்டிய வீரர்கள்..நடுவானில் சாகசம் செய்த சுக்கோய்! புல்லரித்து நின்ற பார்வையாளர்கள்
கோவை: கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வரும் 'தரங் சக்தி 2024' எனும் பெயரிலான சர்வதேச விமான கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடுவானில் சீறிப் பாய்ந்து சாகசம் செய்த விமானங்களைக் கண்டு பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.
கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் 'தரங் சக்தி 2024' எனும் பன்னாட்டு விமான கூட்டு பயிற்சி முகாம் கடந்த 6 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் இந்திய விமான படையுடன் இணைந்து ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படையினர் கூட்டு விமான பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று துவங்கியது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு பொதுத்துறை மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். இன்றும் நாளையும் பொதுத்துறை மற்றும் ராணுவத்தினர், ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் கண்காட்சியை பார்க்கும் வகையிலும் வருகிற 15ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய விமான படையைச் சேர்ந்த சாரங்க் உள்ளிட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் தேஜஸ், சுக்காய், மிக் ஆகிய போர் விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Typhoon போர் விமானம் மற்றும் பிரான்சின் ரபேல் ஆகிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தன.
வானில் வெண் புகையை கக்கியபடி ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களில் இந்திய வீரர்கள் சாகசம் செய்ய, அரங்கில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். தேஜஸ், சுக்காய், மிக் விமானங்கள் சாகசம் செய்த போது பின்னணியில் தேச பக்தி பாடல்கள் ஒலிபரப்பட்ட நிலையில், பார்வையாளர்கள் உணர்ச்சி மிகுதியில் உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படையினரின் கூட்டு விமான சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது வானிலை விமானங்கள் வட்டமிட, ஹெலிகாப்டர்கள் வண்ண வண்ண புகைகளை கக்கியபடி சாகசங்கள் புரிந்தன. வெளிநாட்டு வீரர்களின் சாகசங்களை விட, நம் நாட்டு வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளே மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்ததாக பார்வையாளர்கள் கூறினர்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்த விமான கண்காட்சி நடக்கவிருக்கும் நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து கோவை வந்தார்.
தொடர்ந்து இந்திய விமானப்படையினரின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய விமானப்படை தலைமை தளபதி சௌத்ரி மற்றும் பயிற்சியில் ஈடுபட்ட நாடுகளின் விமானப்படை உயரதிகாரிகள் ராணுவ மரியாதையை ஏற்று கொண்டனர். இதையடுத்து கூட்டு விமான பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படை தளபதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications