கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லா போய்கிட்டு இருக்கும் திமுக-காங். கூட்டணியில் குண்டு போடும் தம்பிதுரை!

Google Oneindia Tamil News

கோவை: திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

MeToo என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை.

சிங்கம்ல

சிங்கம்ல

பிரதமர் மோடியை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் எனவும், அதிமுகவினரை சர்க்கஸ் கூடாரம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சர்க்கசில் புலி, சிங்கம் தான் இருக்கும். அதிமுகவினரை சிங்கம், புலி என ஸ்டாலின் ஏற்று கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக ஸ்டாலினுக்கு நன்றி. திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார், தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா?

[நாங்க இருக்கோம்.. சசிகலா அணிக்கு திடீர் தூது விடும் பாஜக.. தமிழக அரசியலில் பரபரப்பு ]

கவலையில்லை

கவலையில்லை

லோக்சபா துணை சபாநாயகர்
தேர்தலுக்கு பின்னர் பிரதமர் தேர்ந்தெடுப்போம் என திமுக கூறினால், அது கபட நாடகம், மறைமுகமாக திமுக-பாஜக உடன்பாடு வைத்துள்ளதால் தான் ராகுல்காந்தியை பிரதமராக அறிவிக்க திமுக தயாராக இல்லை. அதிமுக தனித்து போட்டியிட்டு 40 தொகுதியிலும் வெற்றி பெறும், தேர்தல் வெற்றிக்கு பின் பிரதமரை முடிவு செய்வோம். எந்த கூட்டணியிலும் அதிமுக இல்லை. 18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அதிமுகவிற்கு கவலையில்லை .

5 வருட ஆட்சி

5 வருட ஆட்சி

முதல்வர் மீதான சிபிஐ விசாரணை குறித்து கருத்து சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி மீது எந்த களங்கமும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறார். திமுக ஆட்சியில் அதிக ஊழல் நடந்தது என முதல்வரே கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எலெக்சன் கமிஷன் ஆதாரிட்டி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை. 5 ஆண்டுகள் முழுமையாக அதிமுக ஆட்சி செய்யும். அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.

கமல்ஹாசன் கட்சி

கமல்ஹாசன் கட்சி

கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்தி வருகிறது. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைக்க தயார் இல்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த நிலையில், தம்பிதுரை தனது பேட்டியில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக ஏற்குமா என்று கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Loksabha Dy speaker Thambidurai says will the DMK agree Rahul Gandhi as PM Candidate?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X