Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டிக்கு செல்வோரின் மிகப்பெரிய கனவு.. மேட்டுப்பாளையத்தில் 2 மாதத்தில் நடக்க போகும் நல்ல விஷயம்

Subscribe to Oneindia Tamil

கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் வழியாக செல்லும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சீசன் காலங்களில் வார விடுமுறை நாட்களில் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப்பணிகள் 2 மாதங்களில் தொடங்கப்பட இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அரசியான ஊட்டியையும் , நீலகிரி மாவட்டத்தையும் சுற்றிப்பார்க்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். உலகின் தலை சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஊட்டி இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். பொஙகல்,தீபாவளி, காலாண்டு தேர்வு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, கோடை விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு, சுதந்திர தினம், குடியரசு தினம், ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் உள்பட பல்வேறு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

coimbatore ooty mettupalayam

மற்ற நாட்களில் ஓரளவு மக்கள் வருவார்கள். ஆண்டு முழுவதும் சீதோசன நிலையில் குளுகுளுவென்று ஊட்டி இருக்கும் என்பதால், பலருக்கும் பிடித்த இடமாக திகழ்கிறது. ஊட்டிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிகஅதிகமாக இருப்பதால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உள்ளுர் வாகனங்களும் செல்ல முடியாததால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து ஊட்டி மெயின் ரோடு தனியார் தீம் பார்க் வரை நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், "கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 47,500 வாகனங்கள் இந்தபாதை வழியாக கடக்கிறது. எனவே சாலை விரிவாக்கம் அவசியமாகிறது. கோவையில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு தேவையான ஆய்வுப் பணிகளை முடித்து, 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலையை விரிவாக்கம் செய்தால் கோவை, ஊட்டி, அன்னூர் மற்றும் சிறுமுகை ஆகிய நான்கு முக்கிய சாலைகளில் ஏற்படும் நெரிசல் குறையும்

இத்திட்டத்திற்காக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்கிறது. மேலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஐந்து முனை சந்திப்பில் போக்குவரத்தை சீரமைக்க ரவுண்டானா அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.. அந்த பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கும். ஊட்டி நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணம் இனி எளிதாகும் என்று அதிகாரிகள் கூறினார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+