Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்டி யானையை வளர்க்கும் பணியை தொடங்கிய பொம்மன் பெள்ளி..விமானத்தில் கை தட்டி வரவேற்ற பயணிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: மும்பையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று விட்டு விமானம் மூலம் கோவை திரும்பிய பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு விமான பயணிகள் கை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்த இந்த தம்பதியினர் மீண்டும் தங்களின் அடுத்த பணியை ஆரம்பித்து விட்டனர். படு சுட்டியான குட்டியானையை வளர்க்கும் பணியை உற்சாகமாக தொடங்கி விட்டனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயை பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தினை கார்த்திகி கோன்சல்வாஸ் இயக்கி இருந்தார்.

இந்த படம் ஆஸ்கர் விருது இறுதி போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதினை தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் பெற்றது. இந்த விருதினை பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் முதல் விருது பெற்ற ஆவண திரைப்படம் என்ற சாதனையும் இந்த படம் படைத்தது.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பொம்மன், பெள்ளி ஆகியோரை சில தினங்களுக்கு முன்பு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து பாராட்டு கேடயமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கிணற்றில் விழுந்த குட்டி யானை

கிணற்றில் விழுந்த குட்டி யானை

பொம்மன் பெள்ளி தம்பதியினர் மீண்டும் தங்கள் பணியை தொடங்கி விட்டனர். புதிதாக ஒரு குட்டி யானையை வளர்க்கவுள்ளனர். இந்த குட்டி யானை சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே காட்டிலிருந்து தாயைப் பிரிந்து அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த வனத்துறை குழுவினர் யானைக் குட்டியை கயிறுகட்டி மேலே தூக்கி காப்பாற்றினர்.

 விளையாடும் குட்டி யானை

விளையாடும் குட்டி யானை

வெளியே கொண்டு வரப்பட்ட யானைக் குட்டியை ஆசுவாசப்படுத்தி வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அந்த யானைக் குட்டியை முதுமலையில் உள்ள யானைப் பாகன் பொம்மனிடம் கொடுத்து வளர்க்கலாம் என வனத்துறை முடிவு செய்தது. அதற்காக யானை குட்டியானது பின்பு முதுமலை சரணாலயத்திற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த யானை குட்டியை பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வருகின்றனர். அப்போது அந்த குட்டி யானை அந்த தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் காட்சியை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அவரது ட்விட்டர் பக்கத்தில், யானை பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

விமான பயணம்

விமான பயணம்

இந்த நிலையில் நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர். விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து அவர்கள் கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்தனர். இந்த நிலையில் பொம்மன், பெள்ளி ஆகியோர் இந்த விமானத்தில் வருவது, விமானிக்கு தெரியவந்தது.

கை தட்டி வரவேற்பு

கை தட்டி வரவேற்பு

உடனடியாக அவர் எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் என்ன சொல்கிறார் என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர். தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று கூறினார். அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்தின் முதல் இருக்கையில் இருந்து எழுந்தனர். உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர். இதை பார்த்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு அவர்களுக்கு கை கூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

பயணிகள் வாழ்த்து

பயணிகள் வாழ்த்து

அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். நிஜ ஹீரோக்கள். இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என தெரிவித்தார். மேலும் கோவை வரும் வரை பொம்மன், பெள்ளியிடம் பயணிகள் அனைவரும் பேசி கொண்டு வந்தனர். கோவையில் விமானம் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வரிசையாக நின்று கொண்டனர். பொம்மன், பெள்ளி விமானத்தை விட்டு இறங்கி வரும் போது வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர்.

சமூக வலைத்தள பகிர்வு

சமூக வலைத்தள பகிர்வு

அத்துடன் அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து அதனை தங்கள் சமூக வலைதளங்களில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு என தலைப்பிட்டு பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் பொம்மன், பெள்ளி ஆகியோர் கோவையில் இருந்து கார் மூலமாக நீலகிரி புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோவை சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவும் பகிர்ந்துள்ளார். இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பொம்மன், பெள்ளி பயணித்த வீடியோவை பகிர்ந்து, அதில் எங்கள் விமானத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஆவண படத்தில் நடித்த கலைஞர்கள் பயணித்தது எங்களுக்கு பெருமையான தருணமாகும் என தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்காத பாராட்டு

எதிர்பார்க்காத பாராட்டு

காட்டுக்குள் யாருக்கும் தெரியாத நிலையில் இருந்த பொம்மன் பெள்ளி தம்பதியர் இன்று உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களுக்கு பொது இடங்களில் கிடைக்கும் பாராட்டு யாருமே எதிர்பார்க்காதது. காட்டுக்குள் இருந்த எங்களுக்கு அங்கிருந்து வெளியில் வந்து நகர பகுதியை பார்வையிட்டதும், அங்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் மிகவும் அளப்பரியது. எங்களுக்கு கிடைத்த இந்த பெருமை எல்லாம் குட்டி யானைகளான ரகு, பொம்மியையே சாரும். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளோம் என்று யானை குட்டியை நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+