Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிஎஸ்டி பற்றி கேள்வி கேட்ட அதே மேடையில் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொன்ன அன்னப்பூர்ணா ஓட்டல் ஓனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளரான சீனிவாசன், கோவையில் நடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து கேட்ட கேள்வி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்த சீனிவாசன், மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகியது. முன்னதாக அதே மேடையில் அன்னப்பூர்ணா ஓட்டல் ஓனர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

கோவை கொடீசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவருமான சீனிவாசன் பேசுகையில், "உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ எங்களுடைய ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க.ஸ்வீட்டுக்கு ஐந்து சதவீதம். உணவுக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை.. ஆனால் உள்ள வைக்குற கீரீம்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது.

nirmala sitharaman coimbatore

அவங்க வர்றாங்க.. ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி காரம் சாப்பிடுவது, அப்புறம் காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பண்ணுக்கு ஜிஎஸ்டி கிடையாது அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி என்பதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் பன்னை வாங்கி கொள்கிறார்கள் அதில் ஜாமையும் கொடுத்துவிடு நானே வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள். கடை நடத்த முடியவில்லை மேடம்.

இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்" என்று கூறினார்.

அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், பலரும் சீனிவாசனை பாராட்டியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்தும் பதிவிட தொடங்கினார்கள்.. மொத்த சமூக ஊடகங்களில் இந்த பேச்சு மட்டுமே ஆக்கிரமித்து வந்தது. இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பலரும் பதிவிட்ட நிலையில், ஒரு கட்டத்தில் அவரே விளக்கம் அளித்தார்.

இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறும் போது, "ஓட்டல் உரிமையாளர் தங்களுடைய பிரச்னையை ஜனரஞ்சகமாகப் பேசியிருந்தார். அதில் தவறு இல்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை ஜி.எஸ்.டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், மாநிலங்களிலிருந்தும் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர் அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி-யை பரம விரோதியாகப் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் ஆதாயமாக இருக்கும்.

ஊறுகாய் மாமியை இப்படி எல்லாம் கேட்டுவிட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று விமர்சனங்கள் சொல்லலாம். இந்த விமர்சனங்களைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஜி.எஸ்.டி வரியை மக்களுக்கு எந்த சுமையும் இல்லாமல், எளிமையாகக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில்தான் இறங்கியுள்ளோம்" என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதனிடையே கடுமையான விமர்சனங்கள் அதிகமான நிலையில், நேற்றே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அன்னப்பூர்னா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவும் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் கோவை அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளரான சீனிவாசன், செப்டம்பர் 11ம் தேதி நடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்பதற்கு முன்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதே மேடையில் நன்றியும் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது தான் வெளியாகி உள்ளது. அதில் சீனிவாசன் கூறுகையில், "தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறேன்... நட்சத்திர ஓட்டல்களின் தென்னிந்திய துணை தலைவராக இருக்கிறேன்..

முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கொரோனா டைமில் பாதிக்கப்பட்ட தொழில்களில் விமானங்களும், ஹோட்டல்களும், ரெஸ்டாரெண்டுகளும் முக்கியமானவை.. நீங்கள் பேங்கில் அந்த ஸ்கீம் கொண்டுவரவில்லை என்றால், ஹோட்டல்களும் போயிருக்கும், ரெஸ்டாரெண்டுகளும் போயிருக்கும்.. சுற்றுலா துறையும் பெரும் அளவு பாதிக்கப்பட்டிருக்கும்.. இப்போது எங்களுக்கு இரண்டே இரண்டு பிரச்சனை தான்.. ஒரு ஆறு அல்லது ஏழு வருசத்திற்கு முன்போ, 10 வருடம் முன்போ , வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால், முதலில் மேனேஜரை பார்க்க வேண்டும். அதன்பிறகு ஒருமாதம் கழித்து ஏஜிஎம்மை பார்க்க சொல்வார்.

அதன்பிறகு இரண்டு மாதம் நடந்தால் டிஜிஎம்மை பார்க்க சொல்வார்.. அப்புறம் 3 மாதங்கள் கழித்து ஒரு 300 சதவீதம் கொலாட்டல் எடுத்துக்குவாங்க.. ஆனால் இன்றைக்கு எங்களை வங்கி அதிகாரிகள் கடன் வாங்குமாறு துரத்துகிறார்கள்.. நாங்கள் பேங்கிற்கு போய் ஆறு ஏழு வருசம் ஆகிவிட்டது.. ஏனெனில் அவ்வளவு சர்வீஸ் கொடுக்குறாங்க.. வங்கி அதிகாரிகள் இந்த சேவையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். அவர்கள் மிகவும் அற்புதமான சேவையை எங்களுக்கு அளிக்கிறார்கள்... இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் பாராட்டியிருந்தார். இந்த வீடியோ இப்போதுதான் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+