உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் கொங்கு நாட்டு விலங்கு... கின்னஸ் சாதனை படைத்த ‘கரும்பி’ ஆடு
கோவை: கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாட்டு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்.. அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீட்டர்) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீட்டர்) அகலமும் கொண்டதாக இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்பவே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. கன்னி, கறுப்பு, மருக்கை, குரும்பை, கச்சைகட்டி, மேச்சேரி, தலைச்சேரி, நெல்லூர், சென்னை சிவப்பு உள்ளிட்ட இன்னும் பல வகையான நாட்டின ஆடுகள் ஊருக்கு ஏற்றார் போல் வளர்க்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் வளர்க்கப்படும் குரும்பை ஆடுகள், நீண்ட நெடிய பாரம்பர்யத்தைக் கொண்டவையாக இருக்கின்றன செம்மறியாட்டு வகையைச் சேர்ந்த இந்த ஆடுகள். மேய்ச்சல் மூலம் மட்டுமே வளர்க்கப்படும் ஆடுகளாக இருக்கின்றன. கோவை சுற்றுவட்டார கிராமங்களில் இந்த ஆடுகளை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்காக இவற்றைக் கேரளா வரை ஓட்டிச் செல்வதும் வழக்கம். கேரளாவில் பாலக்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
குரும்பை ஆடுகள் இறைச்சிக்காகவும், கழிவுகள் உரமாக பயன்படுவதாலும், அதன் முரட்டு ரோமம் நல்ல விளைக்கு போவதாலும் அதிக அளவில் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் வளர்க்கிறார்கள். குரும்பை ஆடுகள் வளர்ப்பில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் பலர் குறைந்தபட்சம் 50 ஆடுகள் தொடங்கி ஏராளமான ஆடுகள் வரை வளர்த்து, விளைநிலங்களில் கிடைப் போட்டு தொழில் செய்கிறார்கள். இந்த ஆடுகள் பொதுவாகவே சிறியதாக இருக்கும். ஆனால் கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் வெள்ளாடு ஒன்று பலரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் மிகச்சிறியதாக உள்ளது.
ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வரும் பீட்டர் என்பவர் தனது தோட்டத்தில் 'கரும்பி' என்ற இந்த 'பெட்டை' ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். 4 வயதான இந்த ஆடு, இயல்பைவிட மிக சிறிதாக இருப்பதை பீட்டர் உணர்ந்தார். எனவே உள்ளூர் கால்நடை டாக்டர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார்
கின்னஸ் குழுவினர் நேரில் வந்து பீட்டரின் ஆட்டை அளந்து பார்த்தனர். அப்போது அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீட்டர்) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீட்டர்) அகலமும் கொண்டதாக இருந்துள்ளது. மேலும் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை கின்னல் அமைப்பு சமூக வலைத்தளத்தில் வெளியிடவே, 'கரும்பி' அனைவரையும் கவர்ந்து வேகமாக பரவி வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications