"என்னது அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லையா?.. அப்போ பார் நாகராஜ் யாரு".. போட்டு கொடுத்த திருநாவுக்கரசு
Recommended Video

கோவை: பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பார் நாகராஜுக்கும் தொடர்பிருப்பதாக திருநாவுக்கரசு கூறிய வாக்குமூலத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக தினமும் புதிய தகவல்கள் வந்தடைகின்றன. இது போன்ற தகவல்கள் வர வர சம்பந்தப்பட்டவர்கள் மீது பொதுமக்களுக்கு கடுங்கோபம் ஏற்படுகிறது.
இப்படித்தான் நேற்றைய தினம் புதிதாக 4 பாலியல் வீடியோக்கள் வெளியாகின. அதில் பார் நாகராஜ் ஆடையின்றி இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன. இதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் அவரது டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கினர்.

வீடியோ
மேலும் பாலியல் புகாரில் பார் நாகராஜுக்கும் தொடர்பிருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என பார் நாகராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

புதிய தகவல்
இந்த நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பார் நாகராஜுக்கும் தொடர்பிருப்பது தற்போது வெளியாகியுள்ள மேலும் ஒரு புதிய வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. சபரிராஜன் என்கிற ரித்தீஷிடம் இருந்த ஆபாச படங்களை நாகராஜன்தான் பரப்பியதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது.

பரபரப்பு
நாகராஜன் மிரட்டி, ஆபாச வீடியோவை வாங்கியதாக திருநாவுக்கரசு பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என போலீஸார் கூறியிருந்த நிலையில் புதிய வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

உண்மைகள்
இதனிடையே பார் நாகராஜ் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் பார் நாகராஜிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என பொதுமக்கள் கருதுகின்றன.












Click it and Unblock the Notifications