பொள்ளாச்சியில் பெண் போலீஸ் உயர் அதிகாரிக்கு மிரட்டல்.. கோவையில் விசிக மாவட்ட செயலாளர் கைது
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏஎஸ்பி சிருஷ்டி சிங்கியை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டிய புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அசோக்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.. கைது செய்யப்பட்ட விசிக செயலாளர் அசோக்குமாரை போலீசார் கோவையில் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த 40 வயதாகும் அசோக்குமார் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடக்கிபாளையம் பிரிவில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம், அசோக்குமார் தொலைபேசியில் பேசினாராம்.

அப்போது அவர், கூடுதல் போலீல் கண்காணிப்ளர் சிருஷ்டி சிங்கை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கூடுத காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் முறைப்படி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் தகாத வார்த்தையால் திட்டுதல், மிரட்டல் விடுத்தது, பெண்ணை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அசோக்குமாரை பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். இதைத்தொடர்ந்து போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications