அதிர்ந்த கோவை.. அடுத்தடுத்த 13 வீடுகளில் கைவரிசை.. வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு
கோவை: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் வீட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 3 லட்சம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொள்ளையில் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் அருகே வீடு ஒன்றில் பதுங்கி இருந்த போது போலீசார் சுற்றி வளைத்து காலில் சுட்டு பிடித்துள்ளனர். மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெண்கள், மூதாட்டிகள் போன்றோரை குறிவைத்து நகைப் பறிப்புச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேபோல, யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடும் சம்பவங்கள், பட்டப் பகலில் வீடு புகுந்து திடும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் வீட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 3 லட்சம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் அரசு அலுவலர்களே உள்ளே குடியிருப்பில் இதுபோன்ற திருட்டுச் சம்பவம் பிற்பகலில் நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி (3) பிளாக்கில் உள்ள 10 வீடுகளிலும் என மொத்தம் 13 வீடுகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருட்டு சம்பவம் நடைபெற்றது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த வீடுகளின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவலறிந்து, கவுண்டம்பாளையம் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது
சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை மேற்கொண்டானர். விசாரணையில், 56 பவுன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் பணம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடுகளில் மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள குடியிருப்பில் சி பிளாஎக்கில் ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பூட்டை உடைத்து கொள்ளையில் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் அருகே வீடு ஒன்றில் பதுங்கி இருந்த போது போலீசார் சுற்றி வளைத்து காலில் சுட்டு பிடித்துள்ளனர். மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கண்டறிப்பட்டதாகவும், காவல் துறையினரைப் பார்த்ததும் மூவரும் தப்பிக்க முற்படவே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக காவல்துறையினர் முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிப் (48), இர்பான் (45), கல்லு எ கலீல் (60) என்பதும், மூவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications