கோவையில் வெற்றி யாருக்கு தெரியுமா? செம்ம ட்விஸ்ட் முடிவை வெளியிட்ட டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்!
கோவை: கோவை லோக்சபா தொகுதி தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் விஐபி தொகுதியாகி இருக்கிறது. இத்தொகுதியில் வெல்லப் போவது யார்? என்பது தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வருகின்றன.
கோவை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. இடதுசாரிகள் 7 முறை வென்ற தொகுதி. திமுக 2 முறை, பாஜக 2 முறை வென்ற தொகுதி. அதிமுக ஒரே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தேசிய அளவில் கோவையில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை தொகுதி தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் பொதுவாக திமுக- பாஜக- அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றே கூறப்பட்டுவந்தது. தற்போது டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் கோவை தொகுதியின் முடிவு எப்படி இருக்கும் என தெரிவித்துள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜகவின் அண்ணாமலை, திமுகவின் கணபதி ராஜ்குமார் இருவருமே தோல்வி அடையக் கூடிய சாத்தியம் இருக்கிறதாம்.. ஆம் அண்ணா திமுகவின் சிங்கை ராமச்சந்திரனே கோவையில் வெல்வார் என்கிறது டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்.

கோவையில் இம்முறை அண்ணா திமுக வென்றால் நிச்சயம் புதிய சரித்திரமாகத்தான் இருக்கும். கோவையில் 2- வது முறை அண்ணா திமுக வென்றது என்பதுதான் அப்புதிய சரித்திரமாக இருக்குமாம்.
கோவை தொகுதியின் முந்தைய தேர்தல் முடிவுகள்:
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி. ஆர். நடராஜன்(சிபிஎம்) 2,93,165
இரா. பிரபு(காங்கிரஸ்) 2,54,501
ஈஸ்வரன்(கொமுபே) 1,28,070
ஆர். பாண்டியன்(தேமுதிக) 73,188
செல்வகுமார்(பாஜக) 37,909
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
நாகராஜன்(அதிமுக) 4,31,717
சிபி இராதாகிருஷ்ணன்(பாஜக) 3,89,701
கணேஷ்குமார்(திமுக) 2,17,083
இரா. பிரபு(காங்கிரஸ்) 56,962
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி. ஆர். நடராஜன்(சிபிஎம்) 5,71,150
இராதாகிருஷ்ணன்(பாஜக) 3,92,007
மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 1,45,104
கல்யாணசுந்தரம்(நாம் தமிழர் கட்சி) 60,519
அப்பாதுரை(அமமுக) 38,061
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications