திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் காலமானார்!
Subscribe to Oneindia Tamil
கோவை: திருப்பூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் உடல்நலக் குறைவால் காலமானார். 2016 முதல் திருப்பூர் தெற்கு தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார் குணசேகரன்.
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு அதிமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குணசேகரன் மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications