2 மணி நேர சினிமா என்பது வேறு.. அரசியல் என்பது வேறு.. வானதி சீனிவாசன் காட்டம்
கோவை: இன்ஸ்டாகிராம், சமூக ஊடகத்தில் இருப்பது அல்ல அரசியல். இந்த போனை தாண்டி உங்களுக்கென்று எதிர்காலம் உள்ளது. 2 மணி நேர சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு. இன்ஸ்டா என்பது ஒரு டூல். அது மட்டுமே அரசியல் அல்ல முடிவெடுப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை, சிவானந்த காலனியில் உள்ள காமராஜர் பள்ளியில் கோவை வடக்குத் தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தங்களுடைய வாக்கை செலுத்துவதற்கு மக்கள் ஆர்வமுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் வாக்கு சாவடிகளில் காணப்படுகின்றனர்.

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் இன்றைக்கு காலை வரையும் கூட திராவிட முன்னேற்றக் கழகம் கோல்ட் காயின், சில்வர் காயின் என ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது. ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 6 மாதங்களாகப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
கோல்டு, சில்வர் காயின்
கோவை தெற்குத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவி அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது. தூக்கும் மக்களை எழுப்பி கோல்டு காயின், சில்வர் காயின் என ஏமாற்றி வருகின்றனர். கோவை மாநகராட்சியிலும் இதேபோல, டிராமா செய்தார்கள். நிச்சயமாக ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும். மக்கள் இதைச் செய்வார்கள். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தலைவர் விஜய் டிரஸ் கோடில் வந்து வாக்களித்தது குறித்த கேள்விக்கு, விஜயின் டிரஸ் கோடு என்பது காமன். ஆடையில் என்ன இருக்கிறது. இளைஞர் சக்தியால் எதுவும் முடியும்.
வாக்கு முக்கியம்
இளைஞர்கள் நமது நாட்டின் உடைய ஜனநாயகத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்றால் இளைஞர்கள் உடைய சக்தியால் மட்டும் தான் முடியும். அதனால் இந்த தமிழகத்தினுடைய தேர்தல் கூட நம் வருங்கால இளைஞர்கள் நலனை பற்றி இளைஞர்களுடைய மேம்பாட்டை பற்றி அவர்களுக்கான வாய்ப்புகளை பற்றி யோசிக்கின்ற தலைவர் மட்டுமல்ல, செயல்படுத்துகின்ற தலைவர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும்.
சினிமா வேறு, அரசியல் வேறு
இன்ஸ்டாவில், சமூக ஊடகத்தில் இருப்பது அரசியல் இல்லை. இந்த போனை தாண்டி உங்களுக்கு என்று எதிர்காலம் உள்ளது. உங்களுடைய வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பு பெற்றோர்களிடம் இருக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு இருக்கிறது. அதனால் இரண்டு மணி நேரம் பார்க்கின்ற சினிமா என்பது வேறு, உண்மையான அரசியல் என்பது வேறு. இன்ஸ்டா என்பது ஒரு கருவி, அது மட்டும் அரசியல் கிடையாது. முடிவெடுப்பதில் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications