தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
கோவை: அண்ணாமலை யாத்திரை நத்துகிறேன் என்று தமிழ்நாடு முழுவதும் பணம் வசூல் செய்துள்ளார் என்று கோவை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
கோவை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணாமலை வந்து பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நான் பெர்சனலா எதுவும் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் பார்த்தீர்கள் என்றால், பொய் சொல்லியே பழக்கப்பட்டவர். ஒரு எடுத்துக்காட்டுக்கு பொய் நம்பர் 1. 20 ஆயிரம் புக் படித்தேன் என்று கூறுகிறார். 13, 14 ஆயிரம் நாட்கள் வாழ்ந்தவரால் 20 ஆயிரம் புக் படிக்க முடியாது.

பொய் நம்பர் 2. நானும் பாஜகவும் இருக்கிற வரை லூலூ மாலோட செங்கல் கூட கோயம்புத்தூருக்கு வராது என்று கூறினார். ஆனால் மால் வந்து இப்போ எல்லாரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பொய் நம்பர் 3. எங்க அப்பா வந்து எனக்கு கோட்டாவில் வாங்கி கொடுத்தார் என்று சொன்னார். மீடியாவில் கூட பேக்ட் செக் போட்டாங்க.. அதற்கு மன்னிப்பு கேட்க சொல்லியிருந்தோம்.
அதற்கு கூட மன்னிப்பு கோர முடியாது என்று சொல்லிவிட்டு நீங்க செக் பண்ணுங்க என்று சொல்கிறார். அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அவர் தான் அதை நிரூபிக்க வேண்டும். பொய்.. பொய்.. என்று அண்ணாமலை என்றால் பொய்.. பொய் என்றால் அண்ணாமலை அப்படித்தான்.
அவர் என்ன நினைக்கிறார் என்றால், என்ன வேண்டும் என்றாலும் நாம பேசலாம். யாரும் கேட்க மாட்டாங்க.. நாம பாட்டு சொல்வதை சொல்லிவிட்டு போயிடலாம்.. மீறி கேள்வி கேட்டால் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. அப்படின்னு சொல்கிற நிலையில் தான் இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட ஒருவரால் கோயம்புத்தூருக்கு நல்லது செய்ய முடியாது. மக்களும் இதை தான் நினைக்கிறார்கள்.
கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை என்று அறிவிக்கப்பட்டதுமே, இண்டஸ்டிரியலில் இருப்பவர்கள் நிறைய பேர் வருத்தப்பட்டாங்க. பேசினாங்க. என்ன காரணம் என்றால், ஒரு தடவை யாத்திரை நடத்துகிறேன்.. அது நடத்துறேன் என்று சொல்லிவிட்டு.. இண்டஸ்டிரியலில் இருக்கவர்களிடம் இது செய்யுங்க.. இதற்கு ஹெல்ப் பண்ணுங்க என்று சொல்லி தமிழ்நாடு முழுவதும் நல்லா வசூல் செய்தார்கள்..
இங்கே வேட்பாளர் ஆனதுமே நிறைய பேர் கிட்ட கால் பண்ணி வசூல் செய்து, இது வந்து வசூல் ராஜா எம்பிபிஎஸ் போல வசூல் ராஜா எம்பிஏ என்று சொல்லலாம். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லிவிட்ட்டு வளர்ச்சியை பற்றி பேசாமல் சம்பந்தமே இல்லாம பேசுவதை இன்றோடு நிறுத்திக்கொளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.












Click it and Unblock the Notifications