ஆட்டோ ஓட்டுனருக்கு கோவையில் மண்டல தலைவர் பதவி! விண்ணப்பிக்காதவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
கோவை: கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டல தலைவராக ஆட்டோ ஓட்டுனர் கதிர்வேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு அவர் விண்ணப்பிக்காத நிலையில் கட்சி தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்து இருப்பதாக அவர் பூரிப்புடன் கூறியுள்ளார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை திமுகவிடம் இழந்துள்ளது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கோவை மாநகராட்சியை கைப்பற்றி அதிமுகவுக்கு, திமுக அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மாநகராட்சி மேயர் பதவி, துணைமேயர் பதவியை திமுக கைப்பற்றியது.

மண்டல தலைவர்கள்
இதையடுத்து மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர் உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 5 மண்டலத் தலைவர்கள், 1 கணக்கு குழு தலைவர், பொது சுகாதாரக் குழு தலைவர், கல்விக் குழு தலைவர், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர், நகரமைப்புக் குழு தலைவர், பணிகள் குழு தலைவர், நியமனக் குழு உறுப்பினர் என ஆகிய 7 நிலைக்குழுத் தலைவர்கள் பதவிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளை கைப்பற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

போட்டியின்றி தேர்வு
கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி 97 இடங்களில் பிரமாண்டமாக வெற்றி பெற்றிருந்தது. இதில் திமுக சார்பில் 10வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ஆட்டோ ஓட்டுனர் கதிர்வேலும் ஒருவர். இவருக்கு கோவை வடக்கு மண்டல தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக ஸ்டாலினுக்கு நன்றி
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ஆட்டோ ஓட்டுனராக எளிய பின்னணியில் இருந்த எனக்கு கவுன்சிலராக வாய்ப்பு தந்ததுடன், வடக்கு மண்டல தலைவராகவும் வாய்ப்பு கொடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் மண்டல தலைவர் பதவிக்கு கட்சி தலைமையிடம் நான் விண்ணப்பம் செய்யவில்லை.

தூங்கியபோது தகவல்
வீட்டில் நேற்று தூங்கிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் வந்து கூறிய பின்னர் தான் எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது தெரியும். எனக்கு கட்சி தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. கட்சி தலைமை என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் செயல்படுவேன்'' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications