வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு!
கோவை: வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. இங்குள்ள 7வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது. சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்கின்றனர். தமிழ்நாட்டிலேயே மிகவும் கடினமான மலைப்பாதையை கொண்டுள்ள மலை இது.

6 கி.மீ பயண தூரத்தில் கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலையின் உச்சியை அடையலாம். இந்த ஏழு மலைகளில் 7ஆவது மலை தான் மிக கடினமான பயணத்தை கொண்டதாக இருக்கும்.
வெள்ளியங்கிரி மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறையினர் அனுமதி தருகின்றனர். கோடை காலத்திற்குப் பின்பு இந்த மலையில் பனி அதிகமாக இருக்கும். எனவே, அப்போது பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
7 மலைகளை கொண்ட வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழுவாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். முழு உடல் பரிசோதனை செய்து மலை ஏற வேண்டும். 6-வது மலையில் வனத்துறை சார்பில் தற்காலிக முகாம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டிரோன் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மலையேற்றத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற கெம்பட்டியைச் சேர்ந்த ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை டோலியில் கட்டி கரடுமுரடான மலைப்பாதை வழியாக கீழே கொண்டு வர வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications