பாலியல் இச்சைக்கு திருநங்கையிடம் சென்றவர்.. டார்ச்சர் செய்ததால் அடித்தே கொலை! வெலவெலத்துப் போன கோவை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ஹோட்டல் ஊழியரைத் திருநங்கைகள் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலைகளில் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாகச் செல்வோரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இது தொடர்பா பொதுமக்கள் போலீசாருக்கு ஏராளமான புகார்களைத் தொடர்ச்சியாக அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவை

கோவை

இதைத் தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி, சாலை ஓரங்களில் நின்று பாலியல் தொழிலுக்கு ஆண்களை அழைக்கக் கூடாது என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இருந்தபோதும் திருநங்கைகள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மாலை 6 மணியில் இருந்து இரவு 2-3 மணி வரை கூட பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

 பாலியல் இச்சை

பாலியல் இச்சை

இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு துடியலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வர்களாக வேலை செய்து வந்த பொன்னமராவதியைச் சேர்ந்த 49 வயதான தர்மலிங்கம் ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் இச்சைக்காகச் சென்றுள்ளார். தர்மலிங்கத்துடன் அவருடன் வேலை பார்க்கும் பிரவீன் என்பவரும் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்தாக தெரிகிறது. இதில் திருநங்கை ரேஸ்மிகா கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

தாக்குதல்

தாக்குதல்

இதைப் பார்த்து அருகில் இருந்த அவரது நண்பர்களான திருநங்கைகள் மம்தா, கவுதமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து தர்மலிங்கம் மற்றும் பிரவீன் ஆகியோரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பிரவீன் அங்கிருந்து ஓடிவிட தர்மலிங்கத்தை ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்குக் கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் தர்மலிங்கம் படுகாயம் அடைந்தார்.

 சிகிச்சை

சிகிச்சை

இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் அவமானம் என்று கருதிய தர்மலிங்கம், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விழுந்து விட்டதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். இருப்பினும், அவரது காயத்தைப் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்திய நிலையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்து போலீசார், உண்மையை கூறும்படி தர்ம லிங்கத்தை வலியுறுத்தி உள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதையடுத்து நடந்த சம்பவங்களை போலீசாரிடம் தர்மலிங்கம் கூறியுள்ளார். இதையடுத்து அடிதடி வழக்குப் பதிவு செய்த துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த்ச சூழலில் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் திடீரென சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அடிதடி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+