இது என்ன டிடிஎஃப் வாசனுக்கு வந்த புது சோதனை! "மஞ்சள் வீரன்" படத்தில் இருந்து நீக்கம்! ரசிகர்கள் ஷாக்
கோவை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படம் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். இதற்கிடையே ஷாக் தகவலாக மஞ்சள் வீரன் படத்தில் இருந்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக இத்திரைப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். யூடியூப் சேனலை நடத்தி வந்த இவர், கடந்தாண்டு வரை பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

அதற்கு இணையத்தில் அதிலும் குறிப்பாக 2கே கிட்ஸ் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. அப்போது இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு எல்லாம் நடிகருக்குத் திரளும் அளவுக்குக் கூட கூட்டம் திரண்டது.
டிடிஎஃப் வாசன்: இருப்பினும், இவர் அதிவேகத்தில் பைக் ஓட்டுவதாகப் புகார் எழுந்தது. அதாவது அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் வேகமாக பைக்கை இயக்கி அதை வீடியோவாகவும் எடுத்துப் பதிவிட்டு வருவதால் பலரும் அதை முயன்று விபத்தில் சிக்குவதாக அப்போதே புகார் எழுந்தது. இந்தச் சூழலில் கடந்தாண்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வீலிங் செய்த போது எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் சிக்கினார். விபத்தைத் தொடர்ந்து அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், டிடிஎஃப் வாசன் பைக் லைசென்ஸும் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. அதன் பிறகும் கூட டிடிஎப் சும்மா இருக்கவில்லை. தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாகத் திருப்பதி கோயிலில் பக்தர்களை பிராங்க் செய்தது மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது.
மஞ்சள் வீரன்: இந்தச் சூழலில் தான் திடீரென தமிழ் சினிமாவில் என்டரி கொடுத்தார் டிடிஎஃப் வாசன். அவர் இயக்குநர் செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். கையில் சூலத்தோடு ஆக்ரோஷமாக பைக் ஓட்டுவது போன்ற பர்ஸ்ட் லுக் கூட வெளியானது. மேலும், அடுத்த சூப்பர் ஸ்டார் வாசன் என்றெல்லாம் இயக்குநர் செல் அம் கூறி வந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் மட்டுமே நடந்ததாகச் சொல்லப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் ஷூட்டிங் நடைபெறவில்லையாம். இருப்பினும், அவ்வப்போது டிடிஎஃப் ரசிகர்கள் மட்டும் மஞ்சள் வீரன் படம் குறித்து இணையத்தில் பேசி வந்தனர்.
நீக்கம்: இதற்கிடையே டிடிஎஃப் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளாராம். இதை படத்தின் இயக்குநர் செல் அம் உறுதி செய்துள்ளார். அதேநேரம் எதற்காக டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களை அவர் பகிரவில்லை.
மேலும், டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்கிறாராம். யார் அந்த புதிய ஹீரோ என்பது குறித்த அறிவிப்பு வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் இயக்குநர் செல் அம் தெரிவித்துள்ளார். திடீரென மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications