தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவை முந்திய தவெக.. ஆட்டத்தையே அடியோடு மாற்றிய கோவிந்தபுரம்!

Subscribe to Oneindia Tamil

கோவை:தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுவரை ஏழு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. கடந்த ஆறு சுற்றுகள் வரை அதிமுகவே முன்னிலை வகித்து வந்தது. ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமா (விசில் சின்னம்), தற்போது அதிமுக வேட்பாளர் பானுமதியைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலைக்கு வந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமா (விசில் சின்னம்), தற்போது அதிமுக வேட்பாளர் பானுமதியைத் தாண்டி 1,304 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலைக்கு வந்துள்ளார். தற்போதைய வாக்கு நிலவரப்படி, தவெக வேட்பாளர் சத்யபாமா 21,034 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 19,730 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், திமுக வேட்பாளர் சுகன்யா 17,898 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 1,632 வாக்குகளையும், இடதுசாரி வேட்பாளர் லட்சுமணன் 402 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

TVK surges ahead of AIADMK in the Dharapuram by-election Govindapuram completely changes the game

தாராபுரத்தில் ஐந்து சுற்று வரை சுமார் 500 முதல் 1000 வாக்குகள் முன்னிலையில் அதிமுக இருந்து வந்தது. ஆனால் ஆறாவது மற்றும் ஏழாவது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை வகிக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றத்திற்குத் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட 'கோவிந்தபுரம்' பகுதி வாக்கு எண்ணிக்கையே முதன்மையான காரணமாக அமைந்துள்ளது.

கடந்த மே 4 நிலவரத்துடன் ஒப்பிடும்போது, கோவிந்தபுரம் பகுதியில் தவெக வேட்பாளர் 1,752 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது 3,036 வாக்குகள் பெற்றுள்ளதால், சுமார் 1,284 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளார். அதேவேளையில், கடந்த முறை அங்கு 3,393 வாக்குகள் பெற்றிருந்த அதிமுக, இம்முறை 1,490 வாக்குகளை மட்டுமே பெற்று 1,903 வாக்குகள் வரை பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் தாராபுரத்தில் திமுக 2,473 வாக்குகளில் இருந்து 2,304 வாக்குகளாகச் சரிந்து 169 வாக்குகளை இழந்துள்ளது. நாம் தமிழர் கட்சி 224 வாக்குகளில் இருந்து 179 ஆகக் குறைந்து 45 வாக்குகளை இழக்க, சிபிஐ கட்சி புதிதாக 79 வாக்குகளைப் பெற்றுள்ளது. செல்வம்பாளையம், சீனாக்கம்பாளையம், சின்னக்கம்பாளையம், பெரியபுதூர் மற்றும் கோவிந்தபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்குக் கிடைத்த இந்த கணிசமான வாக்கு உயர்வே, தாராபுரம் தேர்தல் களத்தில் அதிமுகவை முந்தி ஆளும் தவெக 917 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற வழிவகுத்திருக்கிறது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மதுராந்தகம் இடைத்தேர்தல்:

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 6-ஆம் சுற்று முடிவிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமாரவேல் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி, தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 23,980 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர் பரந்தாமன் 15,751 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். இதன் மூலம் தவெக வேட்பாளர், திமுகவை விட 8,229 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.

அதேவேளையில், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 14,111 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். தவெக வேட்பாளரை ஒப்பிடும்போது, அதிமுக வேட்பாளர் 9,869 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே தவெக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது; ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு வித்தியாசத்தை அதிகரித்துத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் விஜய் தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்தது, டீ குடித்தது, முருங்கைக்காய் பறித்தது, டிராக்டர் ஓட்டியது போன்றவை தவெகவிற்கு நல்ல பலனைத் தந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+