குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர்
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக வேகம் காட்டுவதில்லை. கோவையில் பிரச்சாரத்திற்கு சென்ற தவெக வேட்பாளர்களை பெண்கள் சுற்றி வளைத்து கேள்விகளால் திணறிடித்தனர். பதில் சொல்ல முடியாமல் அவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் என்.எம் சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வாரச்சந்தை என்பதால் கூட்டம் அலைமோதிய நிலையில், வேட்பாளர் பொதுமக்கள் காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

பெண்கள் பாதுகாப்பு
அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் மற்றும் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் சுகுமார் கூறினார். அதை ஆமோதித்த காய்கறி கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம் பெண்கள் சராமரி கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். "உங்கள் தலைவர் விஜய் அவரது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை, பேசுவதில்லை எனச் செய்திகள் வருகிறதே.
இட்ஸ் வெரி ராங் புரோ
தன்னுடைய ரத்த உறவுகளையே பார்க்காத ஒருவர், எப்படி தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பார் என்று நம்ப முடியும். இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது. அதே போல் உங்கள் கட்சியில் இருக்கும் சிறு வயதுடையவர்கள் மற்ற கட்சிகளின் வயது மூத்த நிர்வாகிகளை அசிங்கமாக பேசுவதும், கேவலமாக பேசுவதும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இது போன்ற செயல்களை ஏன் உங்கள் தலைவர் விஜய் கண்டிக்கவில்லை. அவ்வாறு பேசுபவர்கள் மீது உங்கள் தலைவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்" என்று கேள்வி எழுப்பினர். இந்த அதிரடி கேள்விகளை சுகுமார் எதிர்பார்க்கவில்லை. நிலைகுலைந்து போன, தவெக வேட்பாளர் சுகுமார் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்தார்.
எஸ்கேப்பான வேட்பாளர்
அவருடன் இருந்த தவெக நிர்வாகிகள் கேள்வி கேட்ட பெண்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் பெண்கள் சமரசம் ஆகாமல் விடப்படியாக கேள்விகளை அடுக்கினார்கள். "எல்லா கேள்விகளையும் ஆதாரத்துடன் தானே கேட்கிறோம். நீங்களும் உரிய ஆதாரத்துடன் பதில் சொல்லுங்கள்" என அந்தப் பெண்கள் கூறியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே அங்கு சுற்றுவட்டாரத்தில் இருந்த பொதுமக்களும் கூடத் தொடங்கினார்கள். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தவெக வேட்பாளர், மேற்கொண்டு பேசத் துணிவில்லாமல் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
அனுமதி கிடைத்தாலும்.. பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்.. அதிர்ச்சியில் தவெக.. ரொம்ப மோசம்ப்பா! -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
"மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க"! வீல்சேரில் வந்த பொன்னம்பலமா இது! தவெகவுக்கு பிரச்சாரம் செய்றாரே! -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சாரத்தை வழிமறித்த பறக்கும் படையினர்! பரபரப்பு! -
கோயம்புத்தூர்–ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் 06181 ஜூன் வரை நீட்டிப்பு அறிவிப்பு












Click it and Unblock the Notifications