ஆதவ் அர்ஜூனா அளவுக்கு கூட.. விஜய்யை சல்லி சல்லியாக நொறுக்கிய நடிகை கஸ்தூரி
கோவை: விஜய் மாநாடுக்கு மாநாடு பேசுகின்றார். ஆனால், அதே டெம்பிளேட்டில் பேசுகின்றார். தமிழகத்தில் நடக்கும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுப்பதில்லை. தூய்மை பணியாளர், அங்கன்வாடி, திருப்பரங்குன்றம் என எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். தமிழகத்தில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை. ஆதவ் அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. சைலன்ட்டாக வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது என்று பாஜக கஸ்தூரி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சி துவங்கி இந்த 4.5 ஆண்டுகளில் போதை பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு போன்றவை சீர்கெட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகின்றது.

குடிநோயாளிகள்
கோவை போராட்டத்தில் நான் பங்கேற்கின்றேன். மக்கள் குரலாக ஒலிக்கின்றோம். படிக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிமினல்கள் புகுந்திருக்கின்றனர். திமுக அரசைப் பொருத்தவரை தமிழக மக்களை குடி நோயாளிகளாக மாற்றிவிட்டனர். அரசே மதுவிற்கு அடிமையாகிவிட்டது. மது விற்பனையை வைத்து அரசு இயங்குகின்றது. பார் லைசன்ஸ் கொடுத்து அதன் மூலம் நிதி திரட்டி கட்சிக்கு நிதி திரட்டுகின்றனர்.
நம்மைச் சுற்றி எதுவும் கட்டுப்படுத்த முடிவில்லை என்றால் கடவுளை நோக்கி வழிபடுவோம். அதுபோல முதல்வர் ஜெபம் பண்ணிக் கொண்டு இருக்கின்றார். எல்லாரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என நினைத்து கொண்டு இருக்கின்றார். முதல்வர் இரவு 9 மணிக்கு மேல எங்கேயாவது வாங்கிங் போக சொல்லுங்க பார்க்கலாம். மக்கள் திரண்டால் ஆதரவு என்றால், புதிய கட்சிக்கு ஏராளமான கூட்டம் திரளுகின்றனர். அப்படி என்றால் அவர்களுக்கு ஆதரவு என்று சொல்கின்றீர்களா?.
தானா சேர்ந்த கூட்டம்
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்திற்கு வந்தது இயற்கையாக வந்த கூட்டம். கமல் பேச்சு சரி என்று சொன்னால், அவர் பேசுனது அவர்களுக்கும் புரியவில்லை. கமல் பேச்சில் தியாக பிரம்மத்தை அவமானப்படுத்திதான் அவர் பேசுகின்றார். தெலுங்கு மக்களை தவறாக பேசினேன் என என் மீது வழக்கு போட்டனர். ஆனால், கமலை பாராட்டத் தெரிகின்றது.
துணை முதல்வர் ரேம்ப்வாக் நடந்துட்டு போகட்டுமே. அதே வேளையில் சாலைகள் தெருக்களிலும் அவர் ஒய்யாரமாக நடக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுகின்றீர்களா என்ற கேள்விக்கு, கட்சி என்ன சொல்லுகின்றதோ அதை செய்வோம். எடப்பாடியாரின் உவமைகளை ரசிக்கின்றேன். கடைசி பாமரனுக்கும் புரியும் வகையில் எதையும் சொல்லிடுவார். இன்னொருத்தன் குழந்தையை எடுத்து கொஞ்சுவதாக உவமை சொல்லி இருக்கின்றார்.
தரக்குறைவான விமர்சனம்
நாஞ்சில் சம்பத் ஒரு தமிழ் அறிஞர். அங்கிருந்து திமுகவை விமர்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றது. ஒரு படத்தை வைத்துதான் இந்த ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என்று இல்லை. நாஞ்சில் சம்பத் விமர்சனம் தரக்குறைவாக, ரசிக்கத் தக்கதாக இல்லை. விஜய் மாநாடுக்கு மாநாடு பேசுகின்றார். அதே டெம்பிளேட்டில் பேசுகின்றார்.
எம்ஜிஆர் காலத்து டெக்னிக்
தமிழகத்தில் நடக்கும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காதவர் அவர். தூய்மை பணியாளர், அங்கன்வாடி, திருப்பரங்குன்றம் என எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை. கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். தமிழகதத்தில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை. ஆதவ் அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை. சைலன்ட்டாக வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது.
ஜனநாயகன் பிரச்சனை
தவெகவில் விருப்பமனு வாங்கி இருக்கின்றனர். அந்த மனுவைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், பின்பு போட்டியிட வேண்டும். மனு தாக்கலாக வேண்டும். நிறைய விஷயங்கள் இருக்கின்றது. ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கங்கனா ரனாவத் படத்திற்கு வந்தது போலவே ஜனநாயகன் படத்திற்கும் பிரச்சினை. இந்த விவகாரம் நீதிமன்றம் போனதும் மத்திய அரசின் கையில் எதுவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications