சபாஷ்.. ஆக்சிஜன் வசதியுடன் 2 பஸ்கள்.. ஒரே நேரத்தில் 24 பேருக்கு சிகிச்சை.. கோவை ஆஸ்பத்திரியில்..!
கோவை ஆஸ்பத்திரியில் வசதியுடன்கூடிய 2 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன
கோவை: கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2 பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது, பெரிதும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதுமே தொற்று தீவிரம் பரவி உள்ளது.. இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.. எனவே, படுக்கைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது..
சிகிச்சைக்கு வரக்கூடிய தொற்று நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. இதில் தொற்று முற்றியவர்கள் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கும் கொடுமையும் நடந்து வருகிறது.

படுக்கைகள்
தொற்று பாதித்த மாவட்டங்களில் கோவையும் ஒன்று.. 2-ம் மிக வேகமாக பரவி வருகிறது. ஒருநாளைக்கு எப்படியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. அனைவருமே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதனால், மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லாத நிலை உருவாகி உள்ளது. அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன...

பஸ்கள்
எனவேதான், தனியார் நிறுவனங்கள் 2 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்சை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கியுள்ளனர். ஆஸ்பத்திரி வாசலில் காத்திருக்கும் நோயாளிகளுக்காக, கேஜிஐஎஸ்எல் நிறுவனம், தொழில்முனைவோர் அமைப்பு, சேவா கேஸ் ஆகியவை இணைந்து இந்த பஸ்களை, அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளன.

ஆக்சிஜன்
ஆக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளிகளுக்கு இந்த பஸ்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்.. ஆக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கும் வகையில் தலா 12 ஆக்சிஜன் இருக்கை வசதிகளுடன் கூடிய 2 பஸ்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..

பஸ்கள்
7 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 6 பெரிய வடிவிலான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன... ஒரு பஸ்ஸில் 12 பேர் என மொத்தம் 24 பேர் சிகிச்சை பெற முடியும். இவர்களுக்கு ஒருநாள் முழுவதும் தேவைப்படும் ஆக்சிஜனை இந்த பஸ்சின் மூலம் வழங்கலாம். இந்த 2 பஸ்கள் பயன்பாட்டினால் கோவை மக்களுக்கு இப்போது ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications