கோயம்புத்தூர் பைபாஸ் அடியோடு மாறுது.. இனி விபத்துக்களே நடக்காது.. தமிழ்நாடு அரசின் மாஸ்டர்பிளான்
கோயம்புத்தூர்: மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சார்பாக கோவையில் உள்ள முக்கியமான எல் அண்ட் டி சாலை அகலப்படுத்தப்பட உள்ளது.
குறுகலான எல் அண்ட் டி பைபாஸ் சாலையை நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை (27.2 கிமீ) ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு (MoRTH) தமிழ்நாடு அரசு திட்டத்தை அனுப்பியுள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

தொப்பூர் கணவாய் பகுதிக்கு இணையாக இங்கே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் இங்கே 120 வாகன ஓட்டிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்கான ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை.
2 வழி சாலையாக இது இருந்தாலும் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலால் மிகவும் குறுகலாக உள்ளது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையை நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை (27.2 கிமீ) ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இங்கே போக்குவரத்து நெரிசல் குறையும்.
அதேபோல் இங்கே விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை பகுதியில் 2022ல் 55 வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். கோயம்புத்தூர் காவல்துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 680 சாலை விபத்துகளில் 711 வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். இதில், மதுக்கரை-நீலாம்பூர் சாலையில் 120 வாகன ஓட்டிகள் உயிரிழந்தனர்.
அந்த அளவிற்கு இந்த சாலை குறுகலானது மற்றும் ஆபத்து நிறைந்தது. இந்த நிலையில்தான் கோவையில் உள்ள இந்த முக்கியமான எல் அண்ட் டி சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. , 28 கிமீ நீளமுள்ள கோயம்புத்தூர் புறவழிச்சாலை L&T டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (L&T TIL) மூலம் கட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இது தென்னிந்தியாவில் BOT அடிப்படையில் தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட முதல் சாலை.
இந்த பைபாஸ் சாலை, நீலம்பூரில் உள்ள NH47ன் சேலம் பக்கத்தில் தொடங்கி, மதுக்கரை அருகே பால்காட் பக்கத்தில் சாலை இணைகிறது. ரூ. 1.04 பில்லியன் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது. கோயம்புத்தூரில் உள்ள NH-47 இல் உள்ள பழைய பாலத்தை ஒட்டி நொயல் ஆற்றின் குறுக்கே செல்லும் ஆத்துபாலம் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புறவழிச்சாலைக்கு 32 ஆண்டுகள் மற்றும் ஆத்துப்பாலம் பாலத்திற்கு 21 ஆண்டுகள் எதுவும் ஆகாது. அதே சமயம் இங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சார்பாக கோவையில் உள்ள முக்கியமான எல் அண்ட் டி சாலை அகலப்படுத்தப்பட உள்ளது.
தொப்பூர் கணவாய்; இன்னொரு பக்கம் தொப்பூர் கணவாய் பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசும் - தேசிய நெடுஞ்சாலை துறை வாரியமும் கையில் எடுத்துள்ளது.
தருமபுரி மாவட்ட தொப்பூரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இந்த கணவாய் கிட்டத்தட்ட ஒரு கொலைகார கணவாய் என்று கூட அழைக்கப்படும். கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.
கொடூர விபத்து: இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications