குழியை தோண்டினால்.. குண்டு குண்டாக தங்கம்.. ஆசையாக போன வியாபாரி.. கடைசியில் புதையலை பார்த்தால்.. ஆஆ!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் புதையல் இருப்பதாக கூறி இரண்டு இளைஞர்கள் வியாபாரி ஒருவரை சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாற்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் சதாசிவம்.

இவர் கடந்த சில வருடங்களாக மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அந்த கடைக்கு இரண்டு பேர் அடிக்கடி வந்து சதாசிவத்திடம் நட்பாக பேசி உள்ளனர்.

வியாபாரி

வியாபாரி

சதாசிவத்திடம் நட்பாக பேசி நெருக்கம் ஆகி உள்ளனர். தினமும் கடைக்கு வர தொடங்கிய அவர்கள், வித விதமான நகைகளை அணிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் வந்துள்ளனர். கை, கழுத்து முழுக்க தங்க நகைகளை அணிந்து கொண்டு வந்துள்ளனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கடைக்காரரிடம் தங்களின் தங்க நகை பற்றி பேச தொடங்கி உள்ளனர். இவரும் தங்க நகை அணிவதை பார்த்து, அந்த கடைக்காரர் ஆர்வமாக கேட்டு உள்ளார். எப்படி இவ்வளவு தங்கம் என்று ஆர்வமாக கேட்டு உள்ளார்.

தங்கம்

தங்கம்

அப்போது பாக்கெட்டில் இருந்து தங்க காசுகளை எடுத்த அவர்கள் இருவரும்.. பாருங்க எங்களிடம் நிறைய தங்கம் உள்ளது என்று கூறி உள்ளனர். நாங்கள் புதையலில் இந்த தங்கத்தை எடுத்தோம். நாங்கள் குழி தோண்டும் வேலை செய்கிறோம், அங்கேதான் தோண்டும் போது பெரிய பீப்பாய் இருந்தது. அதை திறந்து உள்ளே பார்த்தால் குண்டு குண்டாக தங்கமாக இருந்தது, என்று கூறியுள்ளனர். உங்களுக்கு புதையல் வேண்டுமா? என்றும் கேட்டு ஆசை காட்டி உள்ளனர். அந்த கடைக்காரரும் அதை கேட்டுக்கொண்டு.. சரி எவ்வளவு புதையலில் கடைக்கும் என்று ஆசையாக கேட்டுள்ளார்.

 புதையல்

புதையல்

அதற்கு அந்த 2 பேரும்.. 1 கிலோ தங்கம் ஒரு இடத்தில் உள்ளது. இதற்கு வெளியே பல கோடி மதிப்பு. ஆனால் எங்களுக்கு விற்க டீலர் கிடைக்கவில்லை. நீங்கள் கடைக்காரர் என்பதால் எளிதாக விற்றுவிடலாம். 10 லட்சம் ரூபாய் கொடுங்கள். உங்களுக்கு இந்த தங்கத்தை விற்கிறோம் என்று கூறியுள்ளனர். அதோடு 2 சின்ன குண்டு மணிகளை கொடுத்து இது புதையலில் இருந்தது. வேண்டும் என்றால் செக் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் அதை சென்று செக் செய்து தங்கம் என்று உறுதி செய்துள்ளார்.

 வியாபாரி

வியாபாரி

அதோடு புதையல் இருக்கும் இடம் என்று கூறி., அந்த வியாபாரியை ஒரு இடத்திற்கு கூட்டி சென்று, ஒரு குழியையும் காட்டி உள்ளனர். இவரும் இதை எல்லாம் நம்பி புதையல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 10 லட்சத்தை கொடுத்துள்ளார். மறுநாளே அவர்களும் நீண்ட குண்டுமணி போன்ற மாலையுடன் வந்து தங்கம் என்று கொடுத்துள்ளனர். அதை சோதனை செய்து பார்த்த வியாபாரி சதாசிவத்திற்கு அது அலுமினியம் என்று தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி


இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி உடனே போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த இரண்டு பேரின் உண்மையான பெயர் கூட வியாபாரி சதாசிவத்திற்கு தெரியாது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+