கோவை விளையாட்டு துறை நீண்ட கால கனவு நனவாகுது.. உதயநிதி தொடங்கி வைக்கும் மாஸ் திட்டம்
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோவையில் சமீபத்தில்தான் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக பெரியார் நூலகம் உள்ளிட்ட சில திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார்.
கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. விமான நிலையம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சர்வதேச ஹாக்கி மைதானம்
விளையாட்டு துறையிலும் கோவை முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. தடகளம், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தேசியளவிலும், சர்வதேசளவிலும் தடம் பதித்து கொண்டிருக்கிறது. ஒண்டிப்புதூர் அருகே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.
தற்போது அதற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல ஹாக்கி விளையாட்டை ஊக்குவிதமாக ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கடநித அதிமுக ஆட்சியில், கோவை மாநகராட்சி சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று 2 முறை அறிவிக்கப்பட்டு, பிறகு கைவிடப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் விசிட்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஹாக்கி பயிற்சி மேற்கொள்வதற்கு பெரிய அளவிலான ஹாக்கி மைதானங்கள் இல்லை என்பதால் அவதிப்பட்டு வந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை ஆர்எஸ்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்தன
சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ரூ.9 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், சர்வதேச ஹாக்கி மைதானம் வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திமுக டார்கெட்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், திமுக தலைமை கோவை மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுவாக்க திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அதற்கு அடுத்த நாளே உதயநிதி கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கவுள்ளது, அரசியல் ரீதியாக திமுகவுக்கான செல்வாக்கை அதிகரிக்கும் என்று அந்தக் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications