எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி
கோவை: சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கொங்கு மண்டலத்தைப் பிடிக்க திமுகவினர் தீவிர வியூகம் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், கோவை, ஒட்டுமொத்த மேற்கு மண்டலத்தில் வெற்றி பெறுவதற்கு இளைஞரணியினருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
கோவை அவிநாசி சாலை முதலிபாளையம் பகுதியில் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நெருங்கும் தேர்தல்
அப்போது அவர் பேசியதாவது: ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்க இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலிலும் நாம் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 'களத்தில் இளைஞர் அணி' என்கிற முன்னெடுப்பைத் தொடங்கி நாம் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டோம். அப்போது நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பிரச்சாரத்தை மேற்கொண்டீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் உங்களின் உழைப்பினால், வெற்றியையும் நீங்கள் பெற்றுத் தந்தீர்கள்.
இப்பொழுது மறுபடியும் 'களத்தில் இளைஞர் அணி' முன்னெடுப்பை நாம் தொடங்கி, இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் அந்த 100 விழுக்காடு வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். கோவையை யார், யாரோ அவர்களின் கோட்டை என்று இன்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கோவை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்று நாம் அவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம் இந்தச் சட்டமன்றத் தேர்தல். அதற்கு இளைஞர் அணியின் பங்களிப்பு மிக, மிக முக்கியமாக இருக்க வேண்டும்.
பிரச்சாரம்
வாக்குச்சாவடி குறிப்பாக வட்டம், கிளை, பாகம், வாக்குச்சாவடி வரை அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று நம் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டும். கழகத்தில் 25 அணிகள் உள்ளன. ஆனால் கலைஞர் அவர்கள் சொல்வார். "எத்தனையோ அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் முதல் அணி, முதன்மையான அணி" என்று அடிக்கடி சொல்வார். கலைஞர் சொன்னதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம் இந்தச் சட்டமன்றத் தேர்தல்.
இளைஞர் அணியைப் பொறுத்தவரை அது ஒரு பயிற்சி களம். நாம் இன்று எடுக்கக்கூடிய இந்தப் பயிற்சிதான் நாளை உங்களின் தகுதியையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கப்போகின்ற பயிற்சி. இன்று மக்களைச் சந்திக்கப் போகிறோம் "அப்படியென்றால் இத்தனை நாளாக மக்களைச் சந்திக்கவில்லையா?" என்றால் கிடையாது, இத்தனை நாட்களாகவும் மக்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருந்தோம்.
திமுக ஆட்சியின் சாதனைகள்
ஆட்சியின் சாதனைகள் எத்தனையோ உள்ளன, அதை மக்களிடம் நினைவுபடுத்த வேண்டியது நம் பொறுப்பு, நம் கடமை. ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களைத் நம் தலைவர் சொல்லிச் செய்து காட்டியிருக்கிறார். விடியல் பயணத் திட்டம் மூலம் 920 கோடிப் பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். 'அன்புக் கரங்கள்' எனும் திட்டத்தின் மூலம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விக்காக மாதம் 2,000 ரூபாய் நம் அரசு வழங்குகிறது. 12,000 குழந்தைகள் இதுவரை பயன்பெற்றுள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டங்கள் கிடையாது.
அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்குத் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், மாணவிகளுக்குப் 'புதுமைப் பெண்' திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 13 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அண்மையில் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளையும் வழங்கியுள்ளோம்.விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டில், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
நிதி ஒதுக்காத மத்திய அரசு
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையானவற்றைச் செய்து கொடுத்ததால்தான். நம் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியான 11.19 விழுக்காட்டுடன் முதன்முறையாக அந்த இலக்கை எட்டியுள்ளது. இதற்கெல்லாம் ஒன்றிய அரசு நமக்கு உதவி செய்ததா? ஆதரவு அளித்ததா? இல்லை. நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை.
எந்த ஒரு திட்டத்தையும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குப் கொண்டு வரவில்லை. மெட்ரோ திட்டத்துக்கு நிதி கேட்டோம், அதற்கும் வழங்கவில்லை. கல்வி நிதி கேட்டோம், அதுவும் தரவில்லை. புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, அதை ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதியை கொடுப்போம் என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. கல்வி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசு பறிக்கப் பார்க்கிறது.
முதுகெலும்புள்ள ஒரே முதல்வர்
பாசிச பா.ஜ.கவைத் துணிச்சலாக எதிர்த்து நிற்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒரே முதலமைச்சர். ஒரே தலைவர் நம் தலைவர் அவர்கள் மட்டும்தான். இன்று நான்கு அடிமைகளைப் பிடித்து எப்படியாவது வைத்துக்கொண்டால் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று ஒன்றிய பா.ஜ.க-வும் சங்கிக் கூட்டமும் நினைக்கிறது. ஆனால் நம் தலைவர் அவர்கள் பா.ஜ.க-வின் ஒவ்வொரு திட்டத்தையும் முறியடித்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமை அலுவலகம் இன்று டெல்லியில்தான் உள்ளது. முன்பெல்லாம் முகத்தை மூடிக்கொண்டு மறைமுகமாகச் இப்பொழுது சென்றார். தொடங்கிவிட்டார். இன்று வெளிப்படையாகவே செல்ல அ.தி.மு.க-வின் கூட்டணிக் பேச்சுவார்த்தை எல்லாம் அமித்ஷா வீட்டில் டெல்லியில் நடக்கிறது.
32 நாட்கள் தான் டார்கெட்
தி.மு.க என்பது அண்ணா உருவாக்கிய கட்சி. இன்று அ.தி.மு.க என்பது அமித்ஷாவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய ஒரு கட்சி. அடிமைகளுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை, எஜமானர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்றாக வேண்டும். சென்னையிலிருந்து ஓடி வாருங்கள் என்று சொன்னாலும் டெல்லிக்கு ஓடிச் செல்வதற்கு அந்த அடிமைக் கூட்டம் தயாராக உள்ளது.
அடுத்த 32 நாட்கள் நமக்கு ஒரே இலக்குதான். நம் பகுதியில் தி.மு.க கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்றதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications