கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அற்புதமாக மாறுகிறது.. பல்வேறு வசதிகளுடன் திறக்கப்படுவது எப்போது?
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என நான்கு இடங்களில் பேருந்து நிலையம் இருக்கிறது. இதில் உக்கடம் பேருந்து நிலைத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. உக்கடம் பஸ் நிலையத்தை சீரமைக்கவும், முன்பு பழ மார்க்கெட் இயங்கி வந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கவும் ரூ.21.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது 40 சதவீதம் பணிகள் நடந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் ஓரளவு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் உக்கடம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, கேரளா, பழனி உள்ளிட்ட நகரங்கள் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ள உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு ரூ.450 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

அப்போது இறங்குதளம் மற்றும் ஏறுதளம் அமைக்க அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப் பட்டன. அப்போது ஏறுதளம் அமைப்பதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியும் அகற்றப்பட்டு ஏறுதளம் அமைக்கப்பட்டது. இதனால் உக்கடம் பஸ் நிலையம் பாதிக்கு பாதி இல்லாமல் போனது போல் மாறியது. மேலும் மேம்பால பணிகள் காரணமாக குண்டும், குழியுமாக மாறியது.
இதனால் உக்கடம் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அரசும் உக்கடம் பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், முன்பு பழ மார்க்கெட் இயங்கி வந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கவும் ரூ.21.5 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் டெண்டர் விடப்பபட்டு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது.. மொத்தம் 80 பஸ்களை கையாளும் வசதியுடன் உக்கடம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. பயணிகள் அமர இருக்கைகள், 3 இடங்களில் கழிப்பறை, இலவச இணையதள வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உக்கடம் பேருந்து நிலையத்தில் புதிய கடைகள், உணவகம், கழிப்பறை உள்ளிட்டவை கட்டும் பணி முடிய போகிறது. அதேபோல் மேலும் பயணிகளுக்கான நிழற்குடைகள் மற்றும் பஸ்கள் நிறுத்த வசதியாக தளம் அமைக்கும் வேலைகளும் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் டவுன் பஸ்கள் முதற்கட்டமாக இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அதாவது அடுத்த ஐந்து மாதத்தில் முழு பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிந்து, உக்கடம் பேருந்து நிலையம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications