பயணிகள் கவனத்துக்கு.. கோவை-திண்டுக்கல் இடையே இன்று முதல் 14ம் தேதி வரை சிறப்பு ரயில்! ரூட் இதுதான்!
கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை - திண்டுக்கல் இடையே வரும் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 12) கொண்டாடப்பட உள்ளது. இன்று நாளை சனிக்கிழமை என்பதால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில்வாய்ப்புள்ள நகரங்களில் வசித்து வரும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

கார், ரயில், அரசு பஸ், ஆம்னி பஸ்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பல்வேறு இடங்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 14ம் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை நேற்று தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளியையொட்டி கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வண்டி எண்கள்: 06077/06078) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் இயங்கும். 10 பொதுபெட்டிகள், 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் கோச்சுடன் இந்த ரயில் இயங்கும்.
அதன்படி கோவையில் இருந்து கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் (06077) காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல்லை சென்றடையும். மறுமார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயில் (06078) மாலை 5.30 மணிக்கு கோவைக்கு வரும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரபட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications