Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையே அடித்து முன்னேறுது பாருங்க.. வருகிறது பிரம்மாண்ட ஸ்டேடியம்.. இந்த போட்டோவை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் மற்றும் வர்த்தக வளாகம் அமைப்பதற்கான விருப்ப அறிவிப்பை (EoI) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) வெளியிட்டுள்ளது. பொது-தனியார் கூட்டு (PPP) முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் திரும்பி பார்க்கும் வகையில் கோவையில் பிரம்மாண்ட ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) கோயம்புத்தூரில் உள்ள ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட AAI யிடம் NOC பெற்றுள்ளது. டெண்டர்கள் மற்றும் பிற ஒப்புதல்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

coimbatore udhayanidhi stalin cricket politics tamil nadu government

இந்த ஸ்டேடியத்திற்கான மாதிரி புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. கருத்துரு திட்டம் மற்றும் திட்ட அமைப்புடன் கூடிய முன்மொழிவுகளை நவம்பர் 24, 2025 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று TIDCO குறிப்பிட்டுள்ளது.

கோயம்புத்தூர் நகரில் சர்வதேச மைதானம்

இத்திட்டம் கோயம்புத்தூர் நகரிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒண்டிப்புதூர் அருகே அமையவுள்ளது. இந்த அறிவிப்பு நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானத் திட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ஆரம்பத்தில் நாட்டின் மிகப்பெரிய மைதானமாக இதை உருவாக்க திட்டமிடப்பட்டது.

தற்போது, ரசிகர்கள் வசதி, மேம்பட்ட வசதிகள் மற்றும் அதிநவீன உள்கட்டமைப்புடன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க மைதானங்களுக்கு இணையாக உலகத் தரம் வாய்ந்த, நவீன வசதியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசகர் விரைவில் இறுதி செய்யப்படுவார்.

நிதி சார்ந்த ஏல மதிப்பீடு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது, விரைவில் பணி ஆணை வழங்கப்படும். ஆலோசகர் 30 முதல் 50 நாட்களுக்குள் வடிவமைப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கையை (DPR) சமர்ப்பிப்பார் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொழில்நுட்பக் குழு, மாநில விளையாட்டுத் துறை பிரதிநிதிகளுடன் இணைந்து, வடிவமைப்பு குறிப்புகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி கிரிக்கெட் மைதானங்களுக்குச் செல்லும்.

கோவை மைதானம்

விரிவான திட்ட அறிக்கை (DPR) சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே திட்டச் செலவு இறுதி செய்யப்படும். இம்மைதானம் தேசிய நெடுஞ்சாலை 544 (சேலம்-கொச்சி வழித்தடம்) அருகே ஒண்டிப்புதூரில், சிறைத் துறைக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலப்பரப்பில், 20 ஏக்கர் நிலத்தில் (8 ஏக்கர் பார்க்கிங்கிற்காக) அமையவுள்ளது.

இருக்கை வசதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், அளவு என்பதை விட தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உள்விளையாட்டு பயிற்சி மற்றும் களமிறங்கும் வசதிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா மற்றும் வீரர்களுக்கான பிற உயர்தர உள்கட்டமைப்புகள் இடம்பெறும்.

அசத்தலான வசதிகள்

தமிழ்நாடு விளையாட்டுத் துறையானது நாட்டிலேயே மிகப்பெரிய பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட இந்த அரங்கத்தை நிர்மாணிக்க உள்ளது. உறுப்பினர்கள் இருக்க நவீன ஹோட்டல் அறைகள், விஐபி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறைகள், அதிநவீன வீரர்களின் ஓய்வறை, ஊடகம் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றுக்கான ஐந்து நட்சத்திர வசதிகளைக் கொண்டிருக்கும் அறைகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவகங்கள், காட்சியகங்கள் மற்றும் கிரிக்கெட் அருங்காட்சியகம். உட்புற பயிற்சி அரங்கம், சிறப்பு உள்ளரங்க பீல்டிங் மண்டலம், பிட்ச் க்யூரேஷன் பயிற்சி, விரிவுரை அரங்குகள் மற்றும் உயர் செயல்திறன் மையம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.

வீரர்களின் வசதிக்காக தனியாக உணவகம், ஸ்பா, தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என்று
அசத்தலான திட்டங்களை வழங்கும்படி யோசனைகளை தமிழ்நாடு அரசு வரவேற்று உள்ளது. சமீபத்தில் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றொரு முக்கியமான பணியையும் மேற்கொண்டுள்ளார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளையும் தொடங்கினார்.

இங்கே அமைய உள்ள மைதானத்தில் கிளப்ஹவுஸ், ஸ்போர்ட்ஸ் பார் மற்றும் உணவகம் ஆகியவையும் கட்டுமான திட்டத்தில் உள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தையும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தையும் நேரடி கேஸ் ஸ்டடிகளாக சிபாரிசு செய்து அதைவிட பிரம்மாண்டமாக, லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் போல கலைநயத்தோடு கட்ட முடிவு செய்துள்ளனர்.

வீரர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கான இடங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றன. உயர் தரமான இருக்கை வசதி தொடங்கி பல நவீன வசதிகள் இங்கே வர உள்ளன. தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+