கோவை மாணவி தற்கொலை விவகாரம்.. சவால்களை முறியடித்து வெற்றி வாகை சூடுங்கள்.. சசிகலா அட்வைஸ்
கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என வி.கே. சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் முன் இருக்கும் சவால்களை முறியடித்து பெண்களும் மாணவிகளும் வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

சசிகலா அறிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக வி. கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு மனவேதனையடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

தற்கொலைக்கு காரணம்
மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை நேர்மையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு
கல்வி கூடங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது. இதை சரியாக கடைபிடிக்காமல் போனால் மாணவ, மாணவியர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். கல்வி கூடங்கள் மட்டுமல்ல, பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகமோ அல்லது எந்த இடமாக இருந்தாலும் இதுபோன்று பொறுப்பற்று பெண்களை அச்சுறுத்தி பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் ஆட்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரோ, உடன் இருப்பவர்களோ அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும்.

பெண்ணாக பிறந்த அனைவரும்
மாணவிகள் மற்றும் பெண்ணாக பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு தைரியமாக எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழவேண்டும் அப்போதுதான் எந்த சவால்களையும் முறியடித்து எதிலும் வெற்றி வாகை சூட முடியும். தவறு இழைக்கும் கல்வி நிறுவனங்களை தமிழக அரசு கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சசிகலா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications