ரெண்டா பிளந்த தார் சாலை.. அருவி மாதிரி தண்ணி கொட்டுதே! விடிய விடிய பெய்த மழையால் கோவையில் அதிர்ச்சி!
கோவை: கோவை மாநகரில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், மருதமலை வடவள்ளி ஐஓபி காலனி செல்லும் பிரதான சாலை மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. சாலை குறுக்கே உடைந்து, மழைநீர் அருவி போல கொட்டியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய தொடர் கன மழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு என கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

குறிப்பாக கோவை ரயில் நிலையம் பகுதியில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து அதிக அளவில் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். மேலும் ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் மேம்பாலம் மற்றும் அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் மேம்பாலம், வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலம் ஆகியவற்றின் அடியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.
வடவள்ளி அடுத்த பி.என்.புதூர் பகுதியில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கணுவாய் பன்னீர் மடை சாலையிலுள்ள ஓடையில் பெருக்கெடுத்து வரும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் தேங்கி நிற்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கோவை மாநகரில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், மருதமலை ஐஓபி காலனி செல்லும் பிரதான சாலை மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மழைநீர் தார்ச்சாலையை அரித்துச் சென்ற நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைப்பதற்கு முன், தற்காலிக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் விரைவில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications