தவெகவில் இணைந்த தனபால் மகன்.. அதிமுக கொடுத்த உயர்ந்த அங்கீகாரம் - வானதி சீனிவாசன் விளக்கம்
கோவை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் கடந்த முறை கூட்டணி வகித்த தேமுதிகவினர் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். மறுபக்கம் அதிமுகவின் சீனியர் நிர்வாகிகளும் கட்சி மாறி வருகிறார்கள். அதிமுக முன்னாள் சபாநாயகரும், கொங்கு பகுதியின் சீனியர் நிர்வாகியுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் தனபால் மகன் இணைந்துள்ளது குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
கோவை, டாடாபாத் பகுதியில் பாஜக இளைஞரணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திமுக அரசில் போதைப்பழக்கம் அதிகமாகி விட்டதாகவும் அதனை கண்டிக்கும் விதமாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள் [Vanathi Srinivasan].

திமுக அரசின் தோல்வி
வசதி படைத்த இளைஞர்கள் உலகம் முழுவதும் அவர்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியுள்ளது தமிழ்நாடு தான். தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை அனுமதிக்க வைத்திருப்பதும் திமுக அரசுதான். திமுக அரசின் தோல்வி, நிர்வாக சீர்கேடு மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பல்வேறு போதைப் பொருட்கள் கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கின்றன.
திமுக அரசு ஐந்து வருடம் நிறைவு செய்துள்ளதில் கஞ்சா வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் புதிய புதிய பெயரில் மதுபான கடைகள் திறக்கப்படுகிறது. சினிமாவில் இருந்து பலரும் வருகிறார்கள் பல்வேறு தலைவர்களும் இருக்கிறார்கள். சினிமாவில் கதாநாயகனை ரசிப்பது வேறு அதேசமயம் உங்களது வருங்காலத்திற்காக யார் முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற தெளிவு இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவரது மகனை முதல்வராக்குவதற்கு தான் எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று பேசினார்.
தேஜ கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களிலும் பாஜக இளைஞரணி சார்பிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும், போதை புழக்கத்திற்கு எதிராகவும் அதனை தடுக்க தவறிய திமுக அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொண்டிருக்க கூடிய டெல்லியில் நடைபெறும் AI Summit இல் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொண்டதையும், அவர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடிய மோசமான காலகட்டத்தை தமிழ்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிறு வயது பெண்கள், குழந்தைகள் எல்லாம் போதைப் பழக்கத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு குற்றச் செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். திமுக அரசு இளைய சமுதாயத்தை சீரழிக்க கூடிய அரசாக மாறியிருக்கிறது. ஒரு புறம் டெல்லியில் பிரதமர் மோடி இளைஞர்களின் Innovation யை பாருங்கள் புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் மேம்பாடு ஆகியவற்றை பாருங்கள் என்று உலகத்தில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கெல்லாம் காட்டிக் கொண்டிருக்கும் பொழுது தமிழகத்தில் திமுக அரசியல் இளைஞர்களும், சிறுவர்களும், பெண்களும், போதைக்கு ஆளாகி கொண்டிருக்க கூடிய சூழல் உள்ளது.
தேமுதிக திமுகவுடன் கூட்டணி
இந்த அரசாங்கம் எப்படி இருந்தாலும் வீட்டிற்கு செல்லக்கூடிய அரசாங்கம். ஆனால், அது ஏற்படுத்தி இருக்கக்கூடிய பாதிப்பு என்பது இந்த ஐந்து வருடத்திற்கு மட்டுமல்ல வருங்கால தலைமுறைக்கும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய பாதிப்பு. இளைஞர்கள் இவை அனைத்தையும் சிந்தித்து செயல்பட வேண்டும். தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தது தொடர்பான கேள்விக்கு, இந்த தகவல் வந்தவுடன் பாஜக தலைவர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்து விட்டார்கள்.
விஜயகாந்த் 2014 ஆம் ஆண்டு நாங்கள் தமிழகத்தில் கூட்டணி அமைத்த பொழுது எவ்வாறு உதவியாக இருந்தார் என்று தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். அவருடைய நோக்கம் தமிழகத்தின் வளர்ச்சியாக இருந்தது. மோடிக்கு ஆதரவாக விஜயகாந்த் எந்த அளவிற்கு பிரச்சாரம் செய்தார் என்பதும் தெரியும். அவருடைய சிந்தனை எல்லாம் நாட்டின் வளர்ச்சியை நோக்கி இருந்தது.
பிரேமலதா சிந்திக்கவில்லை
ஆனால், பிரேமலதா விஜயகாந்த் நேற்று எடுத்த முடிவு என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கிறோம். தமிழகத்தின் நலன் கடந்த ஐந்தாண்டுகளாக எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதை புரிந்த பிறகும் கூட பல்வேறு கூட்டங்களில் அதைப் பற்றி பேசியிருந்தாலும் கூட திமுக கூட்டணியில் அவர் இணைந்து இருக்கிறார் என்பது தமிழகத்தின் நலனை பிரேமலதா விஜயகாந்த் சிந்திக்கவில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் திமுக கூட்டணி என்பது மக்களை போதைக்கு இழுத்து செல்லக்கூடிய கூட்டணியாக உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கூட்டணியாக இருக்கும் நிலையில் எதற்காக அவர் அதில் இணைந்தார் என்பது விளங்கவில்லை தேர்தலில் வெல்ல முடியாத ஒரு கூட்டணிக்கு எதற்காக அவர் சென்றாரோ அது அவருக்கு பலன் அளிக்காது. எடப்பாடி பழனிச்சாமி தாய்மொழி தின வாழ்த்து காவி நிற உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை பயன்படுத்தியது பின்னர் அதனை நீக்கியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக வந்த பிறகுதான் திருவள்ளுவர் காவியுடைய அணிவது, திருநீறு பூசுவது, ருத்ராட்சம் மாலை அணிவது போன்று கூறுகிறார்கள்.
திருவள்ளுவருக்கு காவி உடை
ஆனால், அவ்வாறெல்லாம் ஒன்றும் கிடையாது. நம்முடைய ஆதீனங்கள் சைவ மதங்களில் எல்லாம் பார்த்தோமேயானால் திருவள்ளுவரின் புகைப்படங்கள் மத அடையாளங்களோடு இருப்பார். மத அடையாளங்களோடு இருப்பவர்தான் திருவள்ளுவர். இந்து மதத்தைப் பற்றி இந்து கடவுள்களைப் பற்றி திருக்குறளில் பேசியிருக்கக் கூடிய திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தால் என்ன தவறு. திருநீறு பூசினால் என்ன தவறு.
திருநீறு பூசுவதும் காவி உடை அணிவதும் தேச விரோதமா என கேள்வி எழுப்பினார். தேச விரோத சக்திகளுடன் எல்லாம் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள் குண்டு வைப்பவர்களுடனெல்லாம் கூட்டணி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள் என்று திமுகவை குறிப்பிட்ட அவர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து திருநீரு பூசினால் என்ன ஆகிவிடப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
தவெக விசில் சத்தம்
எடப்பாடி பழனிச்சாமி அந்த பதிவை நீக்கியது பற்றி தெரியாது. காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பது பற்றி அவர்களிடம் நான் கேட்க வேண்டும். தேர்தல் நோட்டிபிகேஷன் வருவதற்கு முன்னால் எத்தனை கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேரப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். மேடையில் தலைவர்களை ஏற்றுவது மூலமாக ஒரு கூட்டணி பலம் ஆகாது. அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் கோபத்துடனும் வெறுப்புடனும் இருக்கிறார்கள்.
மக்களின் கோபம் அவர்களின் ஏமாற்றம் என்பதுதான் இந்த தேர்தலில் பிரதிபலிக்க போகிறது. தமிழக முழுவதும் விசில் சத்தம் அதிகமாக கேட்கப்படுகிறது என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு, எங்கள் வீட்டிலும் பால் குக்கர், அடித்துக் கொண்டுதான் இருக்கிறது என பதில் அளித்தார்.
லோகேஷ் தமிழ்செல்வன்
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் அவரது மகன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்தான கேள்விக்கு, ஒரு புதிய கட்சி வருகின்ற பொழுது ஏற்கனவே இருக்கின்ற கட்சியில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ அல்லது தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஏற்கனவே அதிமுக அவருக்கு நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் என்கின்ற உயர்ந்த அங்கீகாரத்தை கொடுத்தது. அதனால் அவர் எந்த தனிப்பட்ட காரணத்திற்காக போயிருக்கிறார் என்பது தெரியாது. ஆனால் ஒட்டுமொத்த இளைஞர்கள் சமுதாயம் தேசிய ஜனநாயக கூட்டணி வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
-
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!











Click it and Unblock the Notifications