அடித்தாடும் பாஜக.. அமித்ஷாவின் வியூகம் ஸ்டாலினுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.. வானதி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டில் பாஜகவால் வெல்ல முடியாது என்றால் எங்களைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும்?. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியின், அமித்ஷாவின் வியூகம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சம்தான் திருவண்ணாமலையில் வெளிப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே கட்சி திமுக தான். பாஜகவால் வெற்றி கொள்ள முடியாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். பீகாரில் வெற்றி பெற்றுவிட்டோம்.

vanathi-srinivasan-has-said-that-amit-shahs-strategy-has-created-fear-in-chief-minister-stalin

அடுத்த இலக்கு

அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்று அமித்ஷா கூறுகிறார். அவரது படையையே கூட்டி வந்தாலும் தமிழகத்தில் எதுவும் நடக்காது" என வாய் சவடால் விட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியாது என்றால் பாஜகவைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும்? திமுகவை வீழ்த்தும் சக்தியாக பாஜக மாறிவிட்டதால் தான் எந்த கூட்டமாக இருந்தாலும் பாஜகவைப் பற்றியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியின், அமித்ஷாவின் வியூகம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சம்தான் திருவண்ணாமலையில் வெளிப்பட்டுள்ளது. அதிக தொகுதிகளைத் தரவில்லை என்றால் த.வெ.க கூட்டணிக்கு சென்று விடுவோம் காங்கிரஸ் மிரட்டி வருகிறது. இந்த பதற்றத்தில்தான் பாஜகவைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

திமுக வலுவான கட்சியல்ல

தமிழ்நாட்டில் திமுக என்பது வலுவான கட்சி அல்ல. சிறுபான்மை மதத்தினரின் வாக்கு வங்கி இல்லாவிட்டால் திமுகவுக்கு எந்தத் தேர்தலிலும் வெற்றியே கிடைக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் திமுக சில சிறு கட்சிகள் துணையுடன் தனித்துப் போட்டியிட்டபோது படுதோல்வி அடைந்தது. ஆனால், அந்த தேர்தலில் பாஜக கூட்டணி 18 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளை வென்றது. தனித்துப் போட்டியிட்டால் ஒருநாளும் திமுகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது மட்டுமல்ல, ஒரு சில தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்பதை 2014 மக்களவைத் தேர்தல் நிரூபித்தது.

1967, 1971, 1989, 1996, 2006, 2021 என 6 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வென்று ஆட்சி அமைத்துள்ளது. 1967ல் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்தும், 1971 காங்கிரஸ் பிளவுபட்டதால் ஏற்பட்ட பலமுனை போட்டி, எம்ஜிஆர் செல்வாக்காலும், 1989ல் அதிமுக பிளவுபட்டதாலும், 1996ல் காங்கிரஸ் பிளவுபட்டதாலும், 2006 தேமுதிக வாக்குகளை பிரித்ததாலும், 2021ல் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட குழப்பங்களாலும்தான் திமுக வென்றது.

அரசியல் விபத்தால் வென்ற திமுக

ஆறு முறையில் அரசியல் விபத்துகளால் வென்ற திமுக, ஏழாவது முறையாக அதுபோன்ற அரசியல் விபத்து நடக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறாத திமுக இந்த முறையும் வெல்லப் போவதில்லை. 1996ம் ஆண்டே தனித்து போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நுழைந்த கட்சி பாஜக. 1998, 1999 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் பெரும் வெற்றி பெறச் செய்தார்கள். திமுகவின் சிறுபான்மையினரை தாஜா செய்யும் இந்து விரோத அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை கூட்டத்தில் 50 ஆண்டுகள், 40 ஆண்டுகள், 30 ஆண்டுகள் திமுகவுக்காக உழைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களை எல்லாம் தனது மகன் உதயநிதியின் புகழ் பாட வைத்ததுதான் ஸ்டாலினின் சாதனை. அண்ணா காலத்திலிருந்து அரசியல் செய்யும் மூத்த தலைவர் துரைமுருகனை துணை முதலமைச்சராக்காமல், மகனை துணை முதல்வராக்கி குடும்ப ஊழலாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம். உயர் நீதிமன்ற தீர்ப்பைகூட மதிக்காமல் காட்டாட்சி நடத்தி வரும் பாசிச திமுக ஆட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+